டீன் ஏஜ் ஆண் குழந்தைக்கும் சிறப்பு உணவுகள் அவசியம்!
இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஆண் குழந்தைகளை வளர்ப்பது எப்படி?யாழ் ஸ்ரீதேவி
``பெண் குழந்தைகள் பதின்பருவத்தை எட்டும்போதே, அவர்களுக்குக் கொடுக்கப்படும் உணவில் அம்மாக்களின் கவனம் கூடும். பருவமடைந்த பின்னர், அவர்களது கர்ப்பப்பையைப் பலப்படுத்தும் உணவுகள் அவர்களுக்குக் கொடுக்கப் படும். மாதவிடாய் நாள்களில் ஏற்படும் சோர்வைக் கணக்கில்கொண்டு அதற்கேற்ற சிறப்பு உணவுகள் அப்போது தரப்படும். ஆண் குழந்தைகளுக்கோ இப்படி சிறப்பு உணவுகள் எதுவும் கொடுக்கப்படுவதில்லை. ஆனால், பதின்பருவத்தை எட்டியவுடன், ஆண் குழந்தைகளுக்கான உணவையும் அம்மாக்கள் பார்த்துப் பார்த்தே கொடுக்க வேண்டும்'' என்கிறார் டயட்டீஷியன் அபிராமி வடிவேல்குமார்.

உயரம், எடை... ஈடுகொடுக்கும் உணவு
``அடுத்த தலைமுறைக்கான உயிரணுக்களின் உற்பத்தி உடலில் ஆரம்பிக்கும் பருவத்தில், ஆண் குழந்தைகளுக்குக் கொடுக்கும் உணவில் அம்மாக்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இந்த வயதில் அவர்கள் திடீரென்று அதிகமாகச் சாப்பிடத் தொடங்குவார்கள். அடிக்கடி `பசி, பசி' எனச் சாப்பிடக் கேட்பார்கள். அவர்கள் பருவமடையும் வளர்ச்சியை எட்டுவதே இதற்குக் காரணம். இந்த மாற்றங்கள் 12 வயதில் தொடங்கி 18 வயதுவரை தொடரும். இந்தக் காலகட்டத்தில் அவர்களுக்கு உடலளவிலும் மனதளவிலும் பலவிதமான மாற்றங்கள் தோன்றும்.

12 வயதில் சுமார்
40 முதல் 50 கிலோ எடையில் இருக்கும் ஆண் குழந்தைகள், அடுத்த ஆறு ஆண்டுகளில் கிட்டத்தட்ட 70 முதல் 80 கிலோ எடையை அடைந்திருப்பார்கள். உயரத்திலும் அபரிமிதமான வளர்ச்சியை எட்டுவார்கள். ஐந்து அடியில் இருந்து சுமார் ஆறு அடி உயரத்தை எட்டுவார்கள். இந்த உடல் வளர்ச்சிகளுடன் ஹார்மோன் சுரப்பும் அதிகரிக்கும்.
எலும்பு வளர்ச்சி, தசை வளர்ச்சி மற்றும் ரத்த உருவாக்கத்துக்கு, இந்த வளர்ச்சிப் பருவத்தில் ஆண் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவு அவசியம். சரியான ஊட்டச்சத்து கிடைக்கத் தவறினால், அவர்களின் முழுமையான வளர்ச்சி பாதிக்கப்படும். நோய் எதிர்ப்புச் சக்தி குறையும். இந்தப் பருவத்தில் சத்துகள் மிகுந்த உணவுகளைக் கொடுக்கத் தவறினால் பின்னாளில் மலட்டுத்தன்மைகூட ஏற்படும்.

என்னென்ன உணவுகள் கொடுக்க வேண்டும்?
பதின்பருவத்தில் ஆண் குழந்தைகளின் வளர்ச்சிக்கு ஈடுகொடுக்க 2,500 கலோரி உணவு தேவைப்படும். அதுவே விளையாட்டில் அதிகம் பங்கேற்கும் ஆண் குழந்தைகளுக்கு 3,000 - 4,000 கலோரி உணவு தேவைப்படும். மாவுச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச்சத்து, வைட்டமின், மினரல் என அனைத்துச் சத்துகளும் சரிவிகித அளவில் உணவில் இடம்பெறும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.
மாவுச்சத்து
மாவுச்சத்து
ஆண் குழந்தைக்குத் தேவைப் படும் எனர்ஜியை அளிக்கும் மாவுச்சத்து, அனைத்து வகை தானியங்களிலும் கிடைக்கும். அரிசி, கோதுமை, கம்பு, சோளம், கேழ்வரகு, சிறுதானியங்களைக் கொண்டு தயாரிக்கும் சாதம், ரொட்டி, அடை, தோசை, உப்புமா ஆகிய மாவுச்சத்து உணவுகளை, தினமும் மூன்று அல்லது நான்கு வேளைகளுக்குக் கொடுக்கலாம்.

கொழுப்புச்சத்து
பதின்பருவ ஆண் குழந்தையின் நரம்பு வளர்ச்சிக்கும் ஹார்மோன் தேவைகளுக்கும், நல்ல கொழுப்புச்சத்தை தினசரி உணவில் சேர்க்க வேண்டும். கொட்டை வகைகளான பாதாம், முந்திரி, நிலக்கடலை ஆகியவற்றில் இருந்து நல்ல கொழுப்பு கிடைக்கிறது. சமையலுக்கு உபயோகிக்கும் எண்ணெய், பால், தயிர் மற்றும் அசைவ உணவுகளிலும் கொழுப்புச் சத்து உள்ளது. இவற்றைக் குறிப்பிட்ட அளவில் உணவில் சேர்க்க வேண்டும்.

புரதச்சத்து
உடல் வளர்ச்சிக்குப் புரதச்சத்து மிகவும் முக்கியம். பதின்பருவ ஆண் குழந்தையின் எடை கூடவும், எலும்பு, தசை வளர்ச்சிக்கும் புரதச்சத்து அவசியம். இது பருப்பு வகைகள், சுண்டல், பால், தயிர், சீஸ் (பாலாடைக்கட்டி) முட்டை, மீன், பிற அசைவ உணவுகள், கொட்டை வகைகள் ஆகியவற்றில் கிடைக்கிறது.
தினமும் ஒரு கப் சுண்டல், ஒரு கப் பருப்பு, 300 - 500 மில்லி பால் அல்லது தயிர், இவற்றுடன் முட்டை அல்லது மீன் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். சைவம் எனில், பருப்பின் அளவை அதிகப்படுத்த வேண்டும்.
தினமும் ஒரு கப் சுண்டல், ஒரு கப் பருப்பு, 300 - 500 மில்லி பால் அல்லது தயிர், இவற்றுடன் முட்டை அல்லது மீன் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். சைவம் எனில், பருப்பின் அளவை அதிகப்படுத்த வேண்டும்.

வைட்டமின் மற்றும் மினரல் சத்துகள்
ஆண் குழந்தையின் வளர்ச்சியை முழுமையடையச் செய்ய, பலவிதமான வைட்டமின் மற்றும் மினரல் சத்துகள் அவசியம். முக்கியமாக கால்சியம், அயோடின் மற்றும் இரும்புச்சத்து. காய்கறிகள், கீரைகள், பழங்கள், கொட்டை வகைகளிலிருந்து இந்தச் சத்துகளைப் பெறலாம். கால்சியம் அதிகமாகக் கிடைக்க பால், தயிர், பருப்பு வகைகள், கொட்டை வகைகளை அதிகம் உணவில் சேர்க்கலாம். இரும்புச்சத்துக்கு கீரை, கொட்டை வகைகள், முட்டை மற்றும் அசைவ உணவுகளைக் கொடுக்கலாம்.

உணவில் சில தவறுகள்...
* ஆண் குழந்தைகளுக்குத் தேவைப்படும் ஆரோக்கிய உணவின் அவசியம் குறித்து அறியாமல் இருக்கும் அம்மாக்கள், `நூடுல்ஸ் செஞ்சு தர்றேன் சாப்பிடு', `பிரெட் வாங்கிட்டு வந்து சாப்பிடு' என்று அவர்களின் பசிக்கு நல்லுணவு கொடுப்பதிலிருந்து தவறுகிறார்கள். இதைச் சரி செய்துகொள்ள வேண்டும்.

* பெரும்பாலான சிறுவர்கள் காய்கறி, பழம் சாப்பிடுவதைத் தவிர்க்கின்றனர். இதனால் வைட்டமின், மினரல் சத்து குறைபாட்டுக்கு ஆளாகின்றனர். நோய் எதிர்ப்புச் சக்தி குறையும். உடல்பருமன் அடையும். சோர்வாகக் காணப்படுவார்கள். கவனம் செலுத்துதல் மற்றும் நினைவாற்றலும் பாதிக்கப்படும். எனவே, காய்கறிகளும் பழங்களும் மிகவும் அவசியம்.
* அதிகமாக வெளியிடங்களில் சாப்பிடும் சிறுவர்களுக்கு வயிற்றில் பூச்சித்தொல்லை ஏற்படலாம். இதன் விளைவாக வயிற்றுவலி மற்றும் சத்துக் குறைபாடுகள் ஏற்பட்டு வளர்ச்சியைப் பாதிக்கும். எப்போதாவது வெளி உணவு `ஓகே'. அடிக்கடி என்றால், அம்மாக்கள் அலர்ட்.
* வளரும் பருவத்தில் உள்ள குழந்தைகளுக்கு, ஜங்க் ஃபுட்களில் உடல் வளர்ச்சிக்குத் தேவையான சத்துகள் கிடைக்காது. மேலும், தேவையற்ற உப்பு, கொழுப்பு உடலில் சேரும். இதனால் உடல்பருமன் முதல் பலவிதமான பாதிப்புகளுக்கும் ஆளாவார்கள். ஆண் குழந்தைகளுக்கு வளர்ச்சியில் இருந்து தன்னம்பிக்கைவரை இது பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் தவிர்க்க வேண்டியது அவசியம்.
ஆண் குழந்தையை ஆரோக்கிய உணவு கொடுத்து வளர்த்தெடுங்கள்!"

No comments:
Post a Comment