Saturday, December 23, 2017

சொல்கிறார்கள்

 பதிவு செய்த நாள் : டிச 24, 2017 

 
Advertisement
Advertisement
சொல்கிறார்கள்
தொற்று நீங்கி கண்கள் பளிச்சிடும்!

வில்வம், வன்னி மரத்தின் மருத்துவ குணங்களை கூறும், இயற்கை மருத்துவர், எஸ்.நந்தினி: சித்தர்கள், நோய்களைத் தீர்க்கும் மூலிகைகளைக் கண்டறிந்தது மட்டுமின்றி, அவற்றை மக்களுக்கு அடையாளம் காண்பிக்கும் வழியையும், அவற்றைப் பாதுகாக்கும் முறையையும் அறிந்திருந்தனர்.
கோவில்களில் மூலிகைகளை, ஸ்தல விருட்சமாக வைத்து பூஜை செய்தனர். சிவன் கோவிலில் வில்வமும், மாரியம்மன் கோவிலில் வேப்பிலை, மஞ்சளும் பிரசாதமாக வழங்கப்படுகின்றன. தமிழகத்தில் பல ஊர்களின் பெயர், அங்குள்ள பிரசித்திப் பெற்ற கோவிலின் தல விருட்சமாக அமைந்துள்ளது, மூலிகையின் பெயரிலேயே விளங்குகிறது.
உதாரணமாக, முல்லைக்கொடி தல விருட்சமாக விளங்கும் திருமுல்லைவாயில்; தென்னை மரம் கொண்ட திருத்தெங்கூர், தெங்கு - தென்னைமரம்; மருதமரம் - திருவிடைமருதுார்; கடம்ப மரம் - திருக்கடம்பூர்.
இதில், சிவத்துருமம், கூவிளம் போன்ற சிறப்பு பெயர்களை பெற்றது வில்வம். பாதிரி, வன்னி, மந்தாரை, வில்வம், மா ஆகிய ஐந்து மரங்களும், தேவலோகத்தில் இருந்து வந்த, 'பஞ்ச தருக்கள்' என, புராணங்கள் போற்றுகின்றன.
சிவ பூஜையில் பிரதான மூலிகையாக விளங்கும் சிறப்பைக் கொண்டது வில்வம். வில்வ மரத்தின் இலை, பூ, பழம், பட்டை, வேர் அனைத்தும், மருத்துவ குணம் வாய்ந்தவை.
வில்வ காயைப் பசும்பாலில் அரைத்துத் தலைக்குத் தேய்த்து, 10 நிமிடம் ஊற வைத்து நீராட, மண்டைச்சூடு, கண் எரிச்சல் நீங்கும். இந்த விழுதை இரவு நேரங்களில் தடவி, காலையில் கழுவ, கரும்புள்ளிகள் நிறம் மாறி, சில நாட்களில் மறையும்.
வில்வ இலையை ஊற வைத்த நீரால் கண்களை கழுவ, கண் தொற்று நீங்கும்; கண்கள் பளிச்சிடும். வில்வ இலைச் சாறுடன், மிளகுத் துாள் சேர்த்து கொடுக்க, காமாலை தீரும். சளி, இருமலுக்கும் சிறந்தது. அதேபோல், வெற்றி தரும் தருவாகப் போற்றப்படுவது வன்னி மரம். ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா மாநிலங்களின், மாநில மரமாக போற்றப்படுகிறது.
மிக மிகப் பழமையான வன்னி மரங்களில் ஒன்று, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ளது. இந்த மரத்தடியில் பிள்ளையார் கோவில் உள்ளது. வன்னி மரம், கோவில்களிலும், விவசாய நிலங்களிலும், மலைக்காடுகளிலும் காணப்படுகிறது. வன்னி மரத்தின் பட்டைய உலர்த்தி சூரணம் செய்து, 2 கிராம் வீதம், காலை, மாலை கொடுத்து வர, விஷம், கபவிருத்தி தீரும். இப்பட்டையைக் கொண்டு செய்யப்படும் உப்பு பஸ்பம் அஜீரணம், மந்தம் நீக்கும். இதன் முதிர்ந்த காய்ந்த தோலை, குடிநீரில் போட்டு கொடுக்க, வயிற்றுக் கட்டி நீங்கும்

No comments:

Post a Comment