Saturday, December 2, 2017

Thanks dinamalar.com




Advertisement
சொல்கிறார்கள்

மாமரத்துடன் அழகான வீட்டை கட்டி வாழ்ந்து வரும், சென்னை, ராமாபுரம், ராயலா நகரைச் சேர்ந்த அனந்தராம கிருஷ்ணன்: அம்மாவும், அப்பாவும் இங்கு வீடு கட்டி குடி வந்து கிட்டத்தட்ட, 30 ஆண்டு களுக்கும் மேலாகிறது. அப்போதெல்லாம், இந்த பகுதி மக்களுக்கு வீடுகளில் கழிப்பறை வசதி கூட இல்லை.அம்மா ஆசிரியை; தோட்டத்தின் மீதும் ஆர்வம் அதிகம். வாழை, தென்னை மரங்களும், காய்கறிகளும் கொண்ட தோட்டத்தை பராமரித்து வந்தனர்.
எங்கள் வீட்டு சமையலுக்கே, தோட்டக் காய்கள் தான். அம்மாவின் தோட்டத்தை பார்த்து தான், எனக்கும் மரங்களின் மீது ஆர்வம் வந்தது.பள்ளி விட்டு வந்ததும், பார்த்து ரசிக்கும் இடம் தோட்டம் தான். இங்கு இருக்கும் பச்சைப் பசேல் இலைகளை பார்த்தாலே, புத்துணர்ச்சி வந்துவிடும்.
கல்லுாரியில் படிக்கும் போது ஒருநாள், மாம்பழத்தை சாப்பிட்டு, கொட்டையை நட்டு, தண்ணீர் ஊற்றினேன். நான் வளரும் போது, அதுவும் வளர்ந்து, இப்போது எனக்கு தோழனாக நிற்கிறது.
நாங்கள் பெரியவர்களானதும், இந்த இடத்தை பிரித்து தரும் போது, எனக்கு தோட்டம் இருந்த இடமே கிடைத்தது. 2014ல் இந்த வீட்டை கட்டி, மனைவி, மகளுடன் குடி வந்தேன்.
இந்த இடத்தில் வீட்டை கட்டும், 'பிளான்' போட்ட பொறியாளர்களிடம் சொன்ன முதல் கண்டிஷனே, இந்த மரத்தை எடுக்க முடியாது என்பதே. அதன்பின் தான், இந்த மரத்தை எடுக்காமல் வீடு கட்டும், 'பிளான்' தயாரானது.
அனந்த கிருஷ்ணன் மனைவி சரஸ்வதி: எனக்கு திருமணமாகி, 18 ஆண்டுகளாகிறது. இந்த மரத்தின் காய், கிளி மூக்கு மாங்காய்கள் போல் இருக்கும்.
சீசனில் முதல் முறை, 500, மறுமுறை, 200 என காய்க்கும். உறவினர், அக்கம் பக்கத்தினர், தெரிந்தவர்கள் என, எல்லாருக்கும் இவற்றை பகிர்ந்து தரும்போது மகிழ்ச்சியாக இருக்கும்.
என் பிறந்த வீட்டில் மரமெல்லாம் கிடையாது. எங்கேயாவது பயணத்தின் போது காய்த்து தொங்கும் மாங் காய்களை காணும் பது, அவற்றை பறித்து பார்க்கும் ஆசை வரும்.
அந்த ஆசை, என் கணவரின் வீட்டில் நிறைவேறியது. கடந்த, 2015 டிசம்பரில் வெள்ளம் வந்த போதும் சரி, 2016ல் வர்தா புயல் வந்த போதும், எங்கள் கவனமெல்லாம், எங்கள் உயிரான இந்த மரத்தின் மீது தான். அதிலும், புயல் காற்றில் மரத்தின் கிளைகள் உடைந்து விட்டதை நினைத்தால், இன்றும் கண்களில் நீர் வரும். தினம் நம்பிக்கையுடன் நீர் ஊற்றியதில், மரம் மீண்டும் வளர்ந்து விட்டது.ல்லாரும் செல்லமாக பிராணிகளை வளர்ப்பர்; ஆனால், எங்கள் வீட்டு செல்லப் பிள்ளை, எங்கள் மாமரம் தான்.
தோல்வியை பழகவும்
கற்று கொடுங்கள்!

குழந்தை வளர்ப்பு தொடர்பாக பெற்றோருக்கு, 'டிப்ஸ்' வழங்கும் உளவியல் ஆலோசகர், பிரவீன்குமார்: தாங்கள் சொல்வதை குழந்தைகள் கேட்பதில்லை என்பது, இன்று பெரும்பாலான பெற்றோரின் புலம்பலும், புகாருமாக இருக்கிறது.
எனவே, உங்கள் குழந்தைகள் எதை செய்ய வேண்டும் என நினைக்கிறீர்களோ, அதற்கான, 'ரோல் மாடலாக' நீங்களே மாற
வேண்டும்.
பள்ளி செல்லும் வயதில், காலை சீக்கிரமாக எழ, அவர்களை பழக்க வேண்டும். காலையில் எழுவது, உணவு,
உறங்கச் செல்வது அனைத்தும், நேரப்படி நடக்க வேண்டும். எழுந்ததும், 'பெட் காபி'
பழக்கம் வேண்டாம்.
ருசி, பசி தாண்டி, உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை பற்றி கூறி, சாப்பிடும் ஆர்வத்தை ஏற்படுத்துங்கள். சமையல் வேலைகளிலும், குழந்தைகளைப் பங்கு பெறச் செய்யுங்கள். உணவை, வீணாக்காமல் சாப்பிடப்
பழக்குங்கள்.
வயதில் பெரியவர் உட்பட யார் கேள்வி கேட்டாலும், அதை முதலில் உள்வாங்கி, உரிய மரியாதையுடன் பதில் சொல்லப் பழக்குங்கள்.
சாப்பிடும் முன் கை கழுவுவதில் துவங்கி, படுக்கைக்குச் செல்லும் போது, பல் துலக்குவது வரை, அனைத்தையும் தாமாகவே செய்ய பழக்க வேண்டும்.
பார்ப்பதை எல்லாம் வாங்கித் தர கேட்டால், குழந்தைக்கு அது தேவையா, உங்கள் பொருளாதாரத்துக்கு அது சரிவருமா என்பதை, முதலில் நீங்கள் சிந்தித்து, அதை சொல்லி புரிய வையுங்கள். இதனால், வளர்ந்த பிறகும் அநாவசியச் செலவு செய்யும்
பழக்கம் வராது.
மேலும், ௮ வயதில், 100 கவுன்ட்ஸ் ஸ்கிப்பிங் போடுவது, 10 வயதில், 100 திருக்குறள் மனப்பாடம் செய்வது என, அந்தந்த வயதுக்கான, 'கோல் செட்' செய்து கொடுங்கள். அதை அடையும் போது குழந்தையை பாராட்டி, அடுத்த, 'கோலை' நோக்கி உத்வேகப்
படுத்துங்கள்.
தன்னை எந்தச் சூழலிலும் பாதுகாத்துக் கொள்வதற்கான விழிப்புணர்வை, அவர்களுக்கு ஏற்படுத்துங்கள். பாலியல் ரீதியான தொந்தரவு நேர்ந்தால், உங்களிடம் தெரியப்படுத்தும் தெளிவையும், நம்பிக்கையையும் கொடுங்கள்.
எதையும் புரிந்து, படிக்கக் கற்றுக் கொடுங்கள். 'கிரியேட்டிவிட்டி'க்கும் முக்கியத்துவம் கொடுங்கள். விளையாட்டு, இசை என, அவர்கள் எந்த துறையில் விருப்பமாக இருக்கின்றனர் என்பதை அறிந்து, அதில் ஊக்கப்படுத்துங்கள்.
வியர்க்க வியர்க்க விளையாடுவது, பசித்த பின் சாப்பிடுவது, இவை இரண்டும் சிறப்பு.
குழு விளையாட்டுகள், நட்பு பாலத்தை உருவாக்குவதுடன், தோல்வியை பழகவும் கற்றுக் கொடுக்கும்.
இடத்துக்கு ஏற்ப கண்ணியமாக உடுத்தும் நாகரிகத்தையும், தவறு செய்தால் மன்னிப்புக் கேட்கவும், உதவி பெற்றால், நன்றி சொல்லவும் கற்றுக் கொடுங்கள்.
அனைவரையும் இன்முகத்துடன் எதிர்கொள்ளவும், எல்லா விஷயங்களையும் நேர்மறையாக அணுகவும் பழக்குங்கள்

No comments:

Post a Comment