Monday, March 23, 2020

புளிப்பு, காரங்களை தவிர்ப்பது நல்லது! - நன்றி: தினமலர் - 20200322 தேதியிட்டது


புளிப்பு, காரங்களை தவிர்ப்பது நல்லது!

நன்றி: தினமலர் - 20200322 தேதியிட்டது

கொரோனா வைரஸ், சுவாச மண்டலத்தை நேரடியாக பாதிக்கும் தன்மை உடையது. கொரோனா வைரஸ் பாதித்தால், சாதாரண சளி முதல், நிமோனியா போன்ற தீவிர நோய்கள் ஏற்படும். காய்ச்சலுடன், இருமல், மூச்சுத்திணறல், தொண்டை வீக்கம், உணவை விழுங்குவதில் சிரமம், தலைவலி போன்ற அறிகுறிகள், ஒன்றோ, ஒன்றுக்கு அதிகமாகவோ இதில் இருக்கலாம்.

ஆயுர்வேத முறைப்படி, பின் பனிக்காலத்தில் கபம் அதிகரித்து, இளவேனிற் காலத்தில் சூரிய வெப்பத்தால், கபம் இளக்கப்படுவதால், நம் உடலில் பல விதமான நோய்கள் ஏற்படுகின்றன. இக்காலகட்டத்தில், பலவீனம் ஏற்பட்டு, தொற்றுக் கிருமிகளின் தாக்கம் அதிகமாக இருக்கிறது.

கபத்தை உடனடியாக தணியச் செய்வது முக்கியம். எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தக் கூடிய மஞ்சள், மிளகு, நெல்லி, வேப்பிலை, சீதல் கொடி, துளசி ஆகியவற்றை கஷாயமாகவோ அல்லது இலையாகவோ தினமும் சாப்பிடலாம்.

உடல் வெப்பத்தை அதிகரிக்கச் செய்ய, இஞ்சி டீ, சுக்கு டீ, சீரக தண்ணீர் ஆகியவற்றை பருக வேண்டும். குளிக்கும் போது, கற்பூரம், சந்தனம், அகில், குங்குமப்பூ முதலியவற்றை பூசிக் கொள்ளலாம். மூக்கடைப்பு மற்றும் தொண்டை பகுதியில் ஏற்படும் பிரச்னைகளை போக்க, நசிய சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும்.

இச்சிகிச்சையில், மூக்கில் எண்ணெய் விடுதல் அனுத் தைலம், சய்பிந்து தைலம் உபயோகிக்கலாம். வாந்தி சிகிச்சை செய்வதன் மூலம் நுரையீரல் மற்றும் வயிற்றுப் பகுதியில் உள்ள கழிவுகளை வெளியேற்றலாம்.

கைகளை அடிக்கடி சுத்தம் செய்வதற்கு, மஞ்சள் நீர், எலுமிச்சை சாறு, வேப்பிலை தண்ணீர் பயன்படுத்தலாம். வேப்பிலைகளை பயன்படுத்தி, துாமம் என்ற புகை போடலாம். சுற்றுப்புறத்தில் இருக்கும் கிருமிகள், இதனால் அழியும். நல்லெண்ணெய், கல் உப்பு, திரிபலா குடிநீர் கொண்டு, அடிக்கடி வாய் கொப்பளிப்பது நல்லது. இது, வாய் வழியாக கிருமிகள் உடலினுள் செல்வதை தடுக்கும்.

எந்த உணவாக இருந்தாலும், நன்கு வேக வைத்து சாப்பிட வேண்டும். புளிப்பு மற்றும் காரங்களை தவிர்ப்பது நல்லது. சந்தனம் நீர், தேன் கலந்த நீர், வெட்டிவேர் நீர் ஆகியவற்றை, அடிக்கடி பருகுவதால், உடலில் நீர் சத்து குறையாமல் இருக்கும். பிரணாயாமம் மற்றும் கபால பஸ்தி ஆகியவற்றை செய்வதன் மூலம், நுரையீரலை பலப்படுத்த முடியும்.

டாக்டர் கவுதமன் கிருஷ்ணமூர்த்தி
ஆயுர்வேத மருத்துவர்,
சென்னை
99400 79511


No comments:

Post a Comment