Friday, March 27, 2020

நாலாயிர திவ்ய பிரபந்தம் - தாயுமான நம்மாழ்வார் thanks toPoems from Tamil Literature


Sunday, April 22, 2012

நாலாயிர திவ்ய பிரபந்தம் - தாயுமான நம்மாழ்வார்


நாலாயிர திவ்ய பிரபந்தம் - தாயுமான நம்மாழ்வார்


தாய்மை என்பது பெண்களுக்கு இயல்பாய் வருவது. ஒரு ஆண் எவ்வளவு தான் முயன்றாலும் தாய்மையின் ஒரு சிறு அளவை கூட எட்ட முடியாது என்பதுதான் உண்மை. 

சிவன் தாயக சென்று பிரசவம் பார்த்ததால் அவனுக்கு தாயுமானவன் (தாயும் ஆனவன்) என்று பெயர் உண்டு.

நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் தன்னை ஒரு தாயாக நினைத்து கண்ணனுக்கு ஒரு தாய் என்னவெல்லாம் செய்வாளோ, அல்லது ஒரு தாய் தன் குழந்தையிடம் எப்படி எல்லாம் இருப்பாளோ/அதன் செயல்களை எப்படியெல்லாம் அனுபவிப்பாளோ அதை பாடலாகத் தருகிறார்.

சில பாடல்கள் மிக மிக ஆச்சரியமானவை. ஒரு தாய் அமர்திருக்கும் போது, அவளின் குழந்தை பின்னால் வந்து "அம்மா" அவளின் முதுகை கட்டி கொள்ளும்...அது போன்ற நுணுக்கமான தருணங்களை படம் பிடிக்கிறார்...

கண்ணன் தொட்டிலில் கிடக்கிறான். அவனை தூங்கப் பண்ணவேண்டும்...நம்மாழ்வார் தாலாட்டுப் பாடுகிறார்....



மாணிக்கம் கட்டி வயிரம் இடைகட்டி
ஆணிப்பொன் னால்செய்த வண்ணச் சிறுத்தொட்டில்
பேணி உனக்குப் பிரமன் விடுதந்தான்
மாணிக் குறளனே தாலேலோ! வைய மளந்தானே தாலே


மாணிக்கம் கட்டி = (தொட்டிலிலே) மாணிக்க கற்களை கட்டி

வயிரம் இடைகட்டி = இடையிடையே வைரக் கற்களை பதித்து

ஆணிப்பொன் னால் = ஆணிப் பொன் என்றால் மிக உயர்ந்த பொன். பத்தரை மாற்று தங்கத்திற்கும் ஒரு படி மேல். 

செய்த வண்ணச் சிறுத்தொட்டில் = தங்கத் தொட்டில், மாணிக்கம், வைரம் இழைத்த தொட்டில்


பேணி = பாதுகாத்து 

உனக்குப் பிரமன் விடுதந்தான் = பிரமன் உனக்குத் தந்தான்

மாணிக் குறளனே = குறள் சிறிய வடிவம் கொண்டது. குறளனே என்றால் சிறிய வடிவம் கொண்டவனே. வாமனாவதாரம் கொண்டவனே


தாலேலோ! வைய மளந்தானே தாலே = தாலேலோ, இந்த உலகை எல்லாம் அளந்தவனே தாலேலோ.

தால் என்றால் முகவாய்...தாடை. 

குழந்தைகளின் தாடையை செல்லமாக தொட்டு தடவி இங்கும் அங்கும் அசைத்து "தூங்கு தூங்கு" என்று தூங்கப் பண்ணுவதால் அதற்க்கு தாலேலோ என்று பெயர். 

No comments:

Post a Comment