Saturday, March 28, 2020

திருக்குறள் - காதலும் நாணமும்


Monday, April 9, 2012

திருக்குறள் - காதலும் நாணமும்



எப்படி நானே போய் அவன் கிட்ட சொல்லறது?

 I love you...do you love me ? அப்படின்னு கேக்க முடியுமா...?

அப்படி சொல்றத நினைச்சு பார்த்தாலே உடம்பு வியர்த்து போகுது...நேர்ல எப்படி
சொல்ல முடியும்.

ஒருவேளை நான் சொல்லி அவன் ஒண்ணும் react பண்ணாட்டி என்ன பண்றது...

அதவிட சொல்லாமலே இருந்திறலாம்...

ஆனாலும் சொல்லிரனும்-நு மனசு கிடந்து அடிச்சுக்குது...

எங்க வச்சு சொல்றது ? library-la ? canteen-leya ? 

எல்லாரும் இருப்பாங்களே? தனியா இருக்கும் போது சொல்றது தான் நல்லது...

பேசாம ஒரு letter-la எழுதி கொடுத்திட்டா என்ன ? reaction-a பார்க்க வேண்டாம்.

கடிதத்தை பார்த்துட்டு "உன்னை பிடிக்கலன்னு சொல்லிட்டா ?

யாராவது friends-கிட்ட கேப்போமா? வேண்டாம் ... அது வேற பெரிய news-ஆகிரும்.

அவனே வந்து என் கிட்ட சொன்னா எவ்வளவு நல்லா இருக்கும்...

ரொம்ப மோசம்...கண்டுக்கவே மாட்டேங்கறான்...

நான் தான் சொல்லணும் போல இருக்கு...


இந்த தவிப்பை ஏழே ஏழு வார்த்தைல சொல்ல முடியுமான்னு யோசிச்சு பாருங்க...

காதலை சொல்லத் துடிக்கும் மனசு, சொல்ல விடாமல் தடுக்கும் நாணம்,

இத்தனையும் ஏழே வார்த்தையில் சொல்ல வேண்டும்...எப்படி ? 





வள்ளுவரால் மட்டும் தான் முடியும்


கரத்தலும் ஆற்றேன் இந்நோயை நோய் செய்தார்க்
உரைத்தலும் நாணம் தரும்

கரத்தலும் - மறைத்தலும், சொல்லாமல் மறைச்சு வைக்கவும்

ஆற்றேன் - முடியல

இந்நோயை = இந்த காதல் நோயையை

நோய் செய்தார்க் = தந்த என் காதலனிடத்தில்

உரைத்தலும் = சொல்லவும்

நாணம் தரும் = வெட்கம் தடுக்கிறது

No comments:

Post a Comment