கந்தர் அலங்காரம் - தலை எழுத்தை அழிக்க
இந்த தலை எழுத்து அப்படின்னு சொல்றாங்களே அத அழிக்க எதாவது eraser இருக்கா?
அதை எப்படி அழிப்பது ?
இருக்கே ... அதுக்கும் ஒரு eraser இருக்கு அப்படின்னு அருணகிரிநாதர் சொல்றார்
அது .....
--------------------------------------------------------------------------------------
சேல்பட் டழிந்தது செந்தூர் வயற்பொழில் தேங்கடம்பின்
மால்பட் டழிந்தது பூங்கொடி யார்மனம் மாமயிலோன்
வேல்பட் டழிந்தது வேலையுஞ் சூரனும் வெற்புமவன்
கால்பட் டழிந்ததிங் கென்றலை மேலயன் கையெழுத்தே
-------------------------------------------------------------------------------------
சீர் பிரிச்சு பார்க்கலாம்
------------------------------------------------------------------------------------------------
சேல் பட்டு அழிந்தது செந்தூர் வயல் பொழில் தேன் கடம்பின்
மால் பட்டு அழிந்தது பூங் கொடியார் மனம் மா மயிலோன்
வேல் பட்டு அழிந்தது வேலையும் சூரனும் வேர்ப்பும் அவன்
கால் பட்டு அழிந்தது இங்கு என் தலை மேல் அயன் கையெழுத்தே
-------------------------------------------------------------------------------------------------
அர்த்தம்:
சேல் பட்டு - மீன்கள் துள்ளி விளையாடியதில்
அழிந்தது - அழிந்தது
செந்தூர் வயல் பொழில் - திரு செந்தூரில் உள்ள வயல்கள் (அவ்வளவு தண்ணி இருக்குமாம் வயலில் , மீன் நீந்தும் அளவுக்கு)
தேன் கடம்பின் - தேன் வழிகின்ற கடம்ப பூ உள்ள
மால் பட்டு - மாலை பட்டு
அழிந்தது - அழிந்தது
பூங் கொடியார் மனம் - பெண்களின் மனம்
மா மயிலோன் - பெரிய மயில் மேல் உள்ள முருகன்
வேல் பட்டு - வேலினால்
அழிந்தது - அழிந்தது
வேலையும் சூரனும் வேர்ப்பும் - காவலை உடைய சூர பத்மனின் கோட்டையும், மலையும்
அவன் - அந்த முருகனின்
கால் பட்டு - திருப் பாதம் பட்டு
அழிந்தது - அழிந்தது
இங்கு என் தலை மேல் அயன் கையெழுத்தே
முருகப் பெருமானின் திருவடி பட்டு நம் தலை எழுத்து மாறும் என்கிறார் அருணகிரிநாதர் ...
No comments:
Post a Comment