Tuesday, March 31, 2020

கறிவேப்பிலை கண்ணுக்கு நல்லது! thanks to dinamalar

கறிவேப்பிலை கண்ணுக்கு நல்லது!

 பதிவு செய்த நாள் : ஏப் 01, 2020 
Advertisement
 
 
 கறிவேப்பிலை கண்ணுக்கு நல்லது!
கறிவேப்பிலையின் மருத்துவ குணங்கள் பற்றி, 'அல்மா' சித்த மருத்துவ நிறுவன நிறுவனர் வேலாயுதம்:
கறிவேப்பிலையை தினமும் உணவில் சேர்த்து வர, முடி கொட்டுவது, இளநரை, வழுக்கை போன்ற பிரச்னைகளை தவிர்க்கலாம். மேலும், ரத்தத்தில் நல்ல கொழுப்பை அதிகரித்து, புற்றுநோய் ஆபத்தை குறைக்கும் ஆற்றல், கறிவேப்பிலைக்கு உள்ளது.ரத்தத்தில், 'ஹீமோகுளோபின்' அளவை அதிகரித்து, சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும், பித்தத்தை தணிக்கும் திறன், இதற்கு உள்ளது.
மேலும், உணவில் நாட்டமின்மை, வயிற்று பொருமல், காய்ச்சல், ரத்த சோகை, பித்த மயக்கம் ஆகியவற்றையும் இது போக்கும்.சங்க காலத்தில், கறிவேப்பிலைக்கு, கஞ்சகம் என்று பெயர். அந்த காலத்திலேயே, நம் முன்னோர், உணவில் அதை பயன்படுத்தி வந்துள்ளனர். இதை, பெரும்பாணாற்றுப் படை என்ற நுாலில் அறிய முடிகிறது. பசு வெண்ணெயை உருக்கி, அதில் மாதுளம் பிஞ்சு, மிளகுத்துாள், கறிவேப்பிலை சேர்த்து சமைத்துள்ளனர்.கறி எனப்படும், உணவு பதார்த்தங்களில் சேர்த்ததாலும், வேப்பிலை போன்று விளங்குவதாலும், கறிவேப்பிலை என, பிற்காலத்தில் அழைக்கப்படும் இந்த இலைக்கு, ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன.
பல விதமாக இதை பயன்படுத்தலாம். சாதத்தில் இதை சேர்த்து, கறிவேப்பிலை சாதம், கறிவேப்பிலை இட்லிப்பொடி, கறிவேப்பிலை கீர் என பயன்படுத்துகின்றனர்.அதுபோல, இதை அரைத்து, அடை போல தட்டி, வெயிலில் காய வைத்து, தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய்யுடன் சேர்த்து சூட வைத்து, ஆறிய பின், தலைக்கு தேய்த்து வர, கண்களுக்கு குளிர்ச்சி உண்டாகும்; முடி கருமையாக வளரும். மேலும், இதனுடன், நெல்லிக்காய், பிஞ்சு கடுக்காய் சம அளவு எடுத்து, அவற்றை மொத்தமாக இடித்து, நல்லெண்ணெய் ஊற்றி, தொட்டால் விரல் சுடும் பதத்தில் இறக்கி வைத்து, அந்த எண்ணெய்யை, தலைக்கு தொடர்ந்து தேய்த்து வர, இளநரை மாறும்; முடி கறுப்பாகும்.இந்த எண்ணெய்யை, 15 நாட்களுக்கு ஒரு முறை சூடுபடுத்திக் கொள்ள வேண்டும்.காலையில், வெறும் வயிற்றில், 15 கறிவேப்பிலை இலைகளை உட்கொண்டு வந்தால், பெண்களுக்கு வயிற்றை சுற்றி ஏற்படும் கொழுப்பு கரையும் என, நம்பப்படுகிறது. ஒரு கைப்பிடி கறிவேப்பிலையுடன் ஒரு தேக்கரண்டி மிளகு சேர்த்து அரைத்து, அரை லிட்டர் தேங்காய் எண்ணெய் கலந்து, காய்ச்சி, தலைக்கு தேய்த்து வர, பொடுகு நீங்கும்; தலை முடி வளரும். கறிவேப்பிலையை உலர்த்தி, பொடி செய்து, தினமும், காலை, மாலை தேனில் கலந்து சாப்பிட, இதயம் வலுப்படும்

No comments:

Post a Comment