Sunday, March 29, 2020

ராமர் ஏன் கிரேட்?














ராவணனை கொன்ற பின், ஒரு பாறையின் மீது அமர்ந்திருந்தார், ராமர். அப்போது, அவருக்கு முன் நிழல் விழுந்தது. காலை நீட்டி அமர்ந்திருந்த ராமர், அது, பெண் நிழல் என தெரிந்து, உடனே, கால்களை மடக்கி, சம்மணமிட்டு அமர்ந்தார். வந்தவரை ஏறெடுத்தும் பார்க்கவில்லை.
வந்த பெண் திரும்பி செல்லும்போது, 'யார்...' என்றார், ராமர்.
'மண்டோதரி... ராவணனின் மனைவி...'
'என்னை எதற்கு பார்க்க வந்தீர்கள்?'
'என் கணவரை, யாரும் இதுவரை வென்றதில்லை. சர்வ வல்லமை படைத்த அவரை, வென்றுள்ள உங்களுக்கு அப்படி என்ன சிறப்பு உள்ளது என, பார்க்க வந்தேன்...'
'பார்த்தீர்களா?'
'பார்த்தேன். என் நிழல கூட உங்கள் மீது படக் கூடாது என, நீட்டியிருந்த காலை மடக்கிய போதே புரிந்து கொண்டேன்...'
'எப்படி?'
'நீங்களோ... மனைவி சீதா நிழலை தவிர்த்து, மற்ற பெண் நிழலைக் கூட, உங்களை நெருங்க விடாதவர் என, புரிந்து கொண்டேன்...'
'அதனால்?'
'என் கணவரோ... தோற்கடித்த ஆணின் மனைவியை உடனே தன் நிழலில் கொண்டு வருபவர். அதுதான், உங்கள் இருவருக்கும் உள்ள வித்தியாசம்...' எனக் கூறி, ராமனின் பதிலுக்கு காத்திராமல் திரும்பி சென்றாள், மண்டோதரி.
ஒரு உபன்யாசத்தில் சொற்பொழிவாளர், வேளுக்குடி கிருஷ்ணன், கூறியது இது.

No comments:

Post a Comment