Friday, March 27, 2020

கம்ப இராமாயணம் - மனச் சிறையில் கரந்த காதல்

, 2012

கம்ப இராமாயணம் - மனச் சிறையில் கரந்த காதல்



கம்ப இராமாயணம் - மனச் சிறையில் கரந்த காதல்


இராமனின் அம்பு பட்டு இராவணன் இறந்து கிடக்கிறான். உடல் எல்லாம் அம்பு.எவ்வளவு பெரிய ஆள் இராவணன். கூற்றையும் ஆடல் கொண்டவன்.

மண்டோதரி அவன் மேல் விழுந்து புலம்புகிறாள்.

அந்த புலம்பலையும் இலக்கியச் சுவையோடு தருகிறான் கம்பன்....






'வெள் எருக்கஞ் சடை முடியான் வெற்பு எடுத்த திரு மேனிமேலும் கீழும்
 எள் இருக்கும் இடன் இன்றிஉயிர் இருக்கும் இடன் நாடிஇழைத்தவாறோ?
 ''கள் இருக்கும் மலர்க் கூந்தல் சானகியை மனச் சிறையில் கரந்த காதல்
 உள் இருக்கும்'' எனக் கருதிஉடல் புகுந்துதடவியதோ ஒருவன் வாளி?


பொருள் விளக்கம்:

வெள் எருக்கஞ் = வெண்மையான எருக்கம் மலரை

சடை முடியான் = தலையில் சூடிய (சிவ பெருமான்)

வெற்பு = மலை (கைலாய மலையை)
எடுத்த திரு மேனி = அந்த மலையை எடுத்த திரு மேனி.

மேலும் கீழும் = அந்த உடலில் மேலும் கீழும் எல்லா இடத்திலும்

எள் இருக்கும் இடன் இன்றி = ஒரு எள்ளு போட்டா எள்ளு விழாது அந்த அளவுக்கு நெருக்கமாக

 உயிர் இருக்கும் இடன் நாடி = இராவணின் உயிர் எங்கே இருக்கிறது என்று தேடித் தேடி

இழைத்தவாறோ? = உடல் எங்கும் இழைத்தன இராமனின் அம்புகள்

கள் இருக்கும் மலர்க் கூந்தல் சானகியை = இதை இரண்டு விதமாக பொருள் கொள்ளலாம்.

ஒன்று - கள் இருக்கும் மலர் கூந்தல் + சானகியை = அதாவது தேன் உள்ள மலர்களை சூடிய சானகியை

இரண்டாவது அர்த்தம் = கள் இருக்கும் + மலர் கூந்தல் சானகியை.

இங்கே கள் இருப்பது பூவில் அல்ல, மலர் உள்ள கூந்தலை கொண்ட சானகியிடம். கள் இருக்கும் (மலர் கூந்தல்) சானகி.

உங்களுக்கு எது பிடிக்குமோ அதை எடுத்து கொள்ளுங்கள்.

நவில் தோறும் நூல் நயம் போலும்.

 மனச் சிறையில் = தன்னுடைய மனமாகிய சிறையில் (விருப்பம் இல்லாமல் அடைத்தால் அது சிறை தானே?)

கரந்த காதல் = ஒளித்து வைத்த காதல்

உள் இருக்கும்'' எனக் கருதி = இன்னும் உள்ளே இருக்கிறதோ எனக் கருதி

உடல் புகுந்து = உடலுக்குள் புகுந்து

தடவியதோ ஒருவன் வாளி? = ஒரு வேளை அவள் உள்ளே இருந்தால்
அவளுக்கு வலிக்க கூடாதே என்று, தடவிப் பார்த்தன அந்த அம்புகள். 


No comments:

Post a Comment