Wednesday, March 18, 2020

அகர முதல எழுத்து எல்லாம்- எனது முக்கிய ஆராய்ச்சி (Post No.7653) thanks to tamil and vedas

அகர முதல எழுத்து எல்லாம்- எனது முக்கிய ஆராய்ச்சி (Post No.7653)



WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No.7653
Date uploaded in London – 5 March 2020   
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.
இறுதியில் வரும் எனது ஆராய்ச்சியினை படிக்கத் தவறாதீர்கள்
அகர முதல எழுத்து எல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு —  என்று வான் புகழ் வள்ளுவன் மட்டுமா சொன்னார் ? ஏசு கிறிஸ்துவும் சொன்னார்;
அது எப்படி?  எப்படியென்றால் இருவருக்கும் பகவத் கீதை மனப்படமாகத் தெரியும்.
எழுத்துக்கெல்லாம் முதலாவது நிற்பது ‘அ’ என்னும் எழுத்து ; அது போல உலகிற்கெல்லாம் மூல  முதல்வன் இறைவனே! என்பது வள்ளுவனின் முதல் குறள் .அப்படிச் சொல்ல வந்ததையும் முதல் குறளாக வைத்தது வள்ளுவன் ஒரு ஜீனியஸ் — மஹா மேதாவி — என்பதைக் காட்டுகிறது .


Jesus Christ said in the Bible,
‘I am Alpha and Omega, the beginning and the end, the first and the last’- Revelation 22-13
ஏசு கிறிஸ்து நானே ‘ஆல்பா’வும் ‘ஒமேகா’வும் என்று புதிய ஏற்பாட்டில் செப்பினார் . ஆல்பா என்பது கிரேக்க மொழியின் முதல் எழுத்து ஒமேகா என்பது கடைசி எழுத்து. கிறிஸ்துவுக்கு கிரேக்க மொழி தெரியாது ; பைபிளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவனுக்கு தமிழும் தெரியாது; சம்ஸ்கிருதமும் தெரியாது; அந்த இரண்டு மொழிகளும் ஜீசசுக்கும் மோசஸுக்கும் முந்திய மொழிகள் என்பதும் தெரியாது.ஏசு பிரானோ எபிரேய/ஹீப்ரு மொழியில் உபன்யாசம் செய்தார்.
வள்ளுவரும் ஏசுவும் இதுபற்றி கதைப்பதற்கு சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கிருஷ்ண பகவான்  பகவத் கீதையில் ‘அக்ஷராணா ம் அகாரோஸ்மி’ (ப.கீ .10-33)- எழுத்துக்களில் நான் ‘அ’ -காரம் என்று சொன்னார் ; அவர் சொல்லுவது மேற் கூறிய இருவர் செப்பியதைவிட இன்னும் பொருத்தமாக உள்ளது . உலகிலுள்ள உயிருள்ள பொருட்களும் உயிரற்ற பொருட்களும் இறைவனின் அம்சமே என்று அர்ஜுனனுக்கு விளக்கும்போது ஒவ்வொரு வகையிலும் முதன்மையான சிறந்த பொருளை விளக்குகையில் “காலங்களில் நான் வசந்தம் ,மாதங்களில் நான் மார்கழி , எழுத்துக்களில் நான் ‘அ’ என்று……….. நிறைய சொல்லிக்கொண்டே போகிறார் . இதற்கு மூலம், உபநிஷத்துக்களில் இருப்பதை சுவாமி சின்மயானந்தா  , அவரது பகவத் கீதை பாஷ்யத்தில் எழுதியுள்ளார் .


சுவாமி சின்மயானந்தா மேலும் விளக்குகையில், சம்ஸ்கிருதம் இனிமையான மொழியாக இருப்பதற்கு பெரும்பாலான சொற்களில் ‘அ’ இருப்பத்தைச் சுட்டிக்காட்டுகிறார். ஒரு சொல்லை உச்சரிக்க அதில் உயிர் எழுத்து இருப்பது அவசியம் என்பது எல்லா மொழிகளுக்கும் பொது என்றாலும் சம்ஸ்கிருதத்தில் நிறைய சொற்கள் ‘அ’காரத்தில் முடிவது இனிமை சேர்ப்பதோடு சொல்வதற்கும் கேட்பதற்கும் நன்றாக இருக்கிறது என்கிறார் ; ஒரு ஹாலில் / மண்டபத்தில் சம்ஸ்க்ருத பாடல் அல்லது துதிகள் முழங்கியவுடன் மன அமைதியும் சாந்தமும் ஏற்படுவதை எடுத்துக் காட்டுகிறார்.
வள்ளுவர் ஒரு ‘பக்கா’ ஹிந்து என்று சொல்லும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் (Inspector General of Police) , தமிழ் அறிஞர் டாக்டர் எஸ் .எம் . டயஸும் (Dr S M Diaz) பகவத் கீதை , பைபிள் , திருமந்திரம் ஆகியவற்றில் ‘அ’ -கரத்தின் பெருமை வருவதை எடுத்துரைத்து மேலை நாட்டு அறிஞர்களும் கூட இந்தப் பிரபஞ்சம் இயங்கவும் நிலை பெறவும் இறைவனே காரணம் என்பதை புகன்றதை எடுத்துக் காட்டியுள்ளார் . சேக்கிழார் அடிப்பொடி டாக்டர் டி.என் ராமச்சந்திரன் (Dr T N Ramachandran) , அப்பர் பெருமானும் தேவாரத்தில் இதை பாடியிருப்பதை எடுத்துக் காட்டியுள்ளார்.
“ஆனத்து முன் எழுத்தாய் நின்றார் போலும்” – அப்பர் தேவாரம்
உலகம் என்னிடம் தோன்றி என்னிடமே முடிகிறது என்று கீதையில் பகவான் சொன்னதையும் (ப.கீ.7-6) டாக்டர் எஸ்.எம் டயஸ் பொருத்தமாகக் காட்டியுள்ளார்.


“அஹம் கருத்னஸ்ய ஜகத: ப்ரபவ: பிரளயஸ் ததா” (BIG BANG THEORY AND BIG CRUNCH THEORY)  (BG.7-6)
xxx
என்னுடைய 50 ஆண்டுக்கால ஆராய்ச்சி
எனக்கு வயது 72 ஆகப்போகிறது. அந்தக் காலத்தில் காஞ்சி பரமாசார்ய (1894-1994)  சுவாமிகளின் உபன்யாசங்களை காமகோடி மடத்தினரே வெளியிட்டனர். அதில் அவர் சொற்கள் பற்றி ஆற்றிய சொப்பொழிவைப் படித்த காலத்தில் இருந்து ஆராயத்  தொடங்கி 50 ஆண்டுகளில் சில முடிவுகளைக் கண்டேன்.
உலகிலேயே பழமையான நூல் ரிக்வேதம். அதன் முதல் துதியில் முதல்  மந்திரம் ‘அக்நி மீளே’ என்று அ–கரத்தில்தான் துவங்குகிறது; அதே போல இறுதி மந்திரமும் அக்கினி பகவானுக்கே!!  .
உலகில் தோன்றிய முதல் இலக்கண நூல் பாணினி எழுதிய ‘அஷ்டாத்யாயி’ ; அதன் ஒரு பகுதியான மகேஸ்வர சூத்திரத்தில் சிவன் உடுக்கையில் எழுந்த முதல் ஒலி ‘அ’ – தான்
சம்ஸ்கிருதத்தில் ஒரு ஸ்லோகம் உள்ளது ; அதில் தமிழ் மொழியில் உள்ளதை போல ஒரு விதி உளது.


அதாவது ஒரு நூலை மங்களச் சொல்லுடன்தான் துவங்க வேண்டும் ; அதனால்தான் ரிக் வேதமும் திருக்குறளும் ‘அ’ என்னும் எழுத்தில் துவங்குகிறது. சம்ஸ்கிருத ஸ்லோகத்தில் ‘அத’ என்றோ ‘ஓம்’ என்றோ நூலைத் துவக்க வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது .
வேத மந்திரங்கள் அனைத்தும் ‘ஓம்’ என்ற பிரணவ மந்திரத்துடன் துவங்குவதாகக் கொண்டாலும் ‘ஓம்’ என்பது  ‘அ +உ +ம’ என்பதன் வடிவமே என்பதை இரு மொழியினரும் ஒப்புக்கொள்வர் . ஆக இந்தக் கோணத்திலிருந்து நோக்கினாலும் ‘அ’  என்பதே முதல் எழுத்து என்பதை ரிக் வேத காலம் முதல் காண்கிறோம்
சம்ஸ்கிருதம் கற்கப் போகும் ஐந்து வயது மாணவனுக்கு பாடசாலையில் கற்பிக்கப்படும் முதல் இலக்கணம் ‘அகாரந்த புள்ளிங்கஹ ராம சப்தஹ’ — என்று ‘அ’ வில் துவங்கும். இதற்குப்பின்னர் உலகில் தோன்றிய முதல் நிகண்டான அமர கோசத்தை மனப்பாடம் செய்ய வைப்பர் ; அதை எழுதியவர் ‘அ’மரஸிம்மன் ; நூலின் பெயர் ‘அ’மர கோஸம் ; இரண்டும் ‘அ’ – வில் துவங்கும் பெயர்கள்!!
வேறு யாரும் செய்யாத ஒரு ஆராய்ச்சியினை நான் செய்து சில ஆண்டுகளுக்கு முன்னர் இங்கும் எழுதினேன்.அதாவது தமிழுக்கு மிக நெருங்கிய மொழி என்பது சம்ஸ்கிருதம் ஒன்றுதான். திராவிட மொழிக் குடும்பம் என்பது சம்ஸ்கிருதம் எந்த மூலத்திலிருந்து வந்ததோ அதே மூலத்தில் இருந்து வந்ததுதான். சிவனின் உடுக்கையின் ஒரு பகுதியிலிருந்து சம்ஸ்கிருதமும் மற்ற ஒரு  பகுதியிலிருந்து தமிழும் வந்ததென ஆன்றோரும் செப்புவார்கள் . இதனால்தான் வடக்கே இமய மலையில் இருந்த அகத்தியனை தமிழுக்கு இலக்கணம் செய்ய சிவபெருமான் அனுப்பி வைத்தார். இதை பாரதியார் வரை எல்லாக் கவிஞர்களும் பாடிவைத்தனர். புறநானுற்றில் ஒரே பாட்டில் ‘பொதியமும் இமயமும்’ என்ற சொற்றோடர் வருவதற்கும் இதுவே காரணம் . ஒவ்வொரு நூலின் பாடற் முதல் குறிப்பு பகுதியைப் பார்த்தபோது எனக்கு ஒரு வியப்பான உண்மை புலப்பட்டது. அதாவது ‘அ’ என்னும் குறில் (short vowel) எழுத்தில் அதிகமான பாடல்கள் இருக்கும். அடுத்துவரும் ‘ஆ’ என்னும் எழுத்தில் (long vowel) குறைவான பாடல்களே வரும் . ஐ , அவ் (Diphthongs I and Au) என்னும் எழுத்துக்களில் பாடல்கள் துவங்காது அல்லது மிகக் குறைவாக இருக்கும். இதுதவிர உயிர் எழுத்துக்களில் (Vowels) துவங்கும் பாடல்களே அதிகம் இருக்கும் . இதன விகிதாசாரம் கூட தமிழிலும் சம்ஸ்க்ருதத்திலும் ஒரே மாதிரி இருக்கும் .இத்தோடு சந்தி இலக்கணம் இன்றுவரையுள்ள இரண்டே பழைய மொழிகள் சம்ஸ்கிருதமும் தமிழும் என்பதையும் நோக்கும்கால் திராவிட மொழிக்கு குடும்பம்- ஆரிய மொழிக் குடும்பம் என்று சொல்வது தவறு . என்பது உள்ளங்கை நெல்லிக்கனி என விளங்கும்;  ஏறத் தாழ 2500 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரே மூலத்தில் இருந்து இரு மொழிகளும் தனித்தனியே வளர்ந்தன; ஆயினும் அதன் கட்டமைப்பு (Morphological and anatomical structure) ஒன்றே. கீழேயுள்ள கீதை , குறள் துவக்க வரிகளை மட்டும் பாருங்கள். கிருஷ்ணரிடமோ வள்ளுவரிடமோ யாரும் போய் நீங்கள் ‘அ’ என்று துவங்கும் பாடல் இவ்வளவு பாடுங்கள் ‘ஆ’  என்று துவங்கும் பாடல் இவ்வளவு பாடுங்கள்! என்று சொல்லவில்லை .ஒரே மூலத்தில் பிறந்த மொழிகள் என்பதால் அது இயல்பாகவே அமைகிறது . ‘சந்தி’ இலக்கணமும் இன்று வரை இவ்விரு மொழிகள் மட்டும் கடைப்பிடிப்பதற்கும் அதற்கென்றே இலக்கணப் புஸ்தகத்தில் விதிகள் இருப்பதும் நான் சொல்வதை நிரூபிக்கும்.


ஆராய்ச்சி முடிவு-
திராவிட, ஆரிய மொழிக்கு குடும்பங்கள் என்ற பிரிவினை தவறு; இந்திய மொழிக்குடும்பம் என்பதன் இரு பிரிவுகளே தமிழும் சம்ஸ்கிருதமும் . இரு மொழிக் குடும்பத்தினரும் அருகருகே வசித்ததால் ஒன்றின் தாக்கம் (Proximity)  மறறொன்றின் மீது வரும் என்ற வாதம் இங்கே பொருந்தாது.
காரணம் ?
மொழியின் உள் அமைப்புக்குள் (internal structure)  உள்ள , கட்டமைப்புக்குள் உள்ள ஒற்றுமைகள் இவை !!
எனது இரண்டாவது ஆராய்ச்சி முடிவு!
இதுவரையும் யாராலும் படித்தறிய முடியாத (Undeciphered Indus Script) சிந்து- சரஸ்வதி நதி தீர நாகரீக  எழுத்துக்களை எவரேனும் படித்து, உலகமே அதை ஒப்புக்கொண்டுவிட்டது என்று வைத்துக் கொள்ளவோம் . அப்போது நான் மேலே கண்டபடி ‘அ ‘- காரத்தில் துவங்கும் சொற்களோ ஒலியோதான் அதிகம் இருக்கும் . ‘ஆ’ என்னும் நெடிலில் துவங்குவது குறைவாக இருக்கும் . நான் சொல்லும் அணுகு முறைப்படி அணுகினால் சிந்துவெளி முத்திரைகளில் அதிக எண்ணிக்கையில் காணப்படும் வடிவை ‘அ’ என்ற எழுத்தாகவோ (letter or sound) ஒலியாகவோ  உச்சரிக்கலாம் .
இனி எழுதும் புத்தகங்களில் ஆரிய – திராவிட மொழிக் குடும்பம் என்பதை நீக்கிவிட்டு இந்திய மொழிக் குடும்பத்தின் இரு பிரிவுகள் தமிழும் சம்ஸ்கிருதமும் என்று காட்ட வேண்டும் . உலகம் முழுதும் சென்ற இந்தியர்கள் மொழியையும் நாகரிகத்தையும் பரப்பினர் என்றே கொள்ள வேண்டும்
மனிதர்கள் தோன்றியது ஆப்பிரிக்க கண்டம் என ஒப்புக்கொண்டாலும் நாகரீகம் தோன்றியது பாரத பூமியே என்பதை நிரூபிக்கலாம் .
‘பாரத பூமி பழம்பெரும் பூமி’, ‘பாரத நாடு பார்க்கெலாம் திலகம்’ என்று பாரதியார் சொன்னது வெறும் புகழுரை அல்ல; என்றும் அழியாத மஹத்தான உண்மை !


திருக்குறளில் ‘அ எழுத்தில் துவங்கும் குறள்கள் — 157
பகவத் கீதையில் ‘அ’ எழுத்தில் துவங்கும் ஸ்லோகங்கள் – 97
திருக்குறளில் ஆ’ எழுத்தில் துவங்கும் குறள்கள் –23
பகவத் கீதையில் ‘ஆ’ எழுத்தில் துவங்கும் ஸ்லோகங்கள் –17
திருக்குறளில் ‘இ’ எழுத்தில் துவங்கும் குறள்கள்- 114
பகவத் கீதையில் ‘இ’  எழுத்தில் துவங்கும் ஸ்லோகங்கள் –21
திருக்குறளில்  ‘ஈ’ எழுத்தில் துவங்கும் குறள்கள்- 8
பகவத் கீதையில் ‘ஈ’ எழுத்தில் துவங்கும் ஸ்லோகங்கள் –1
திருக்குறளில் ‘உ’ எழுத்தில் துவங்கும் குறள்கள்-81
பகவத் கீதையில் ‘உ’ எழுத்தில் துவங்கும் ஸ்லோகங்கள் –9
திருக்குறளில் ‘ஊ’ எழுத்தில் துவங்கும் குறள்கள்– 21
பகவத் கீதையில் ‘ஊ’ எழுத்தில் துவங்கும் ஸ்லோகங்கள் –2
திருக்குறளில் மொத்தம் 1330 குறள்கள்;
பகவத் கீதையில் மொத்தம் 700 ஸ்லோகங்கள்.
இந்த இரண்டு நூல்களும் எடுத்துக் காட்டுகளே .
கம்ப ராமாயணத்திலும் இதைக் காணலாம்; காளிதாஸனிலும் இதைக் காணலாம் ; திவ்யப் பிரபந்தத்திலும் இதைக் காணலாம் ; தேவாரத்திலும் இதைக் காணலாம்!!


ஒரு அற்புதமான (wonderful pattern) பாணியைக் காண்கிறோம் .
குறில் என்றால் அதிகம்;
நெடில் என்றால் குறைவு .
உலகில் பழைய மொழிகளில் வேறு எங்கும் காண முடியாது .
அது மட்டுமா ? பழங்கால மொழிகளில் நம்மைப் போல அ ஆ இ ஈ ……………. க ச ட த ப ற …………. ய ர ல வ ………… வரிசையும் கிடையாது. அப்படி அகர வரிசையோ கொஞ்சம் சந்தியோ இருந்தால், அவை நமக்குப்  பின்னால் பிறந்த அல்லது நமது செல்வாக்கிற்கு உட்பட்ட மொழியாக இருக்கும்!!
Tags – அகர முதல, நெடில் , குறில், திருக்குறள் , பகவத் கீதை , அ -காரம்
வாழ்க சம்ஸ்கிருதம், வளர்க தமிழ்


–subham–

No comments:

Post a Comment