[New post] உலக மொழிகள் தமிழில் இருந்து உதித்தனவா? (Post No.7716)
Yahoo/Inbox
- Tamil and Vedas <comment-reply@wordpress.com>To:theproudindian_2000@yahoo.co.inThu., Mar. 19 at 8:45 a.m.
Respond to this post by replying above this line New post on Tamil and Vedas
உலக மொழிகள் தமிழில் இருந்து உதித்தனவா? (Post No.7716)
by Tamil and VedasWRITTEN BY LONDON SWAMINATHANPost No.7716Date uploaded in London – 19 March 2020Contact – swami_48@yahoo.comPictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.சேலம் என்ற நகரம் அமெரிக்காவிலும் உண்டு. தமிழ்நாட்டிலும் உண்டு. பெர்லின் என்ற பெயரில் 30 நகர்கள் உள்ளன. நல்லூர் என்ற பெயரில் நூற்றுக் கணக்கான ஊர்கள் இருக்கின்றன. இவைகளை வைத்து ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுத்த முடியாது. வேறு சில வட்டாரங்களில் (SECONDARY EVIDENCE) இருந்து சான்று கிடைத்தால் ஆராய்ச்சியைத் தொடரலாம். 1987-ல் நடந்த ஒரு நிகழ்வு இதோ.தொழில் அதிபரும் தமிழ் அறிஞருமான பொள்ளாச்சி மகாலிங்கம் ஆதரவில் சாத்தூர் சேகரன் என்ற மொழி ஆராய்ச்சியாளர் லண்டனுக்கு வந்தார் . சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர், பி.பி.சி.யில் (B B C TAMIL SERVICE) சாத்தூர் சேகரனைப் (30-09-1991) பேட்டி கண்டு ஒலிபரப்பினேன். தமிழோசை நேயர்கள் அதற்கு பெரும் வரவேற்பு கொடுத்தனர். ஆனால் அவர் உலகிலுள்ள 140-க்கும் மேலான மொழிகள் தமிழ் மொழியில் இருந்து தோன்றியதற்கான சான்றுகள் இருப்பதாகச் சொல்லி பல புத்தகங்களை எனக்கும் தமிழோசை சங்கர் அண்ணாவுக்கும் வழங்கினார். அவர் சொன்ன கருத்தில் எனக்கு ஒப்புதல் இல்லை என்பதை தனிப்பட்ட உரையாடலில் விளம்பினேன்.அதற்குப் பின்னர் லண்டனில் CHANNEL FOUR சானல் ஃபோர் (4) நிகழ்ச்சியில் ஒரு சுவையான நிகழ்ச்சி ஒலிபரப்பாகியது. அதில் புதிய மொழிக் கொள்கையை முன்வைத்த ஒரு ரஷ்யயரையும் இஸ்ரேலியரையும் காட்டினார்கள். அவர்களின் கூற்றுப்படி பைபிளில் கூறப்படும் TOWER OF BABEL பேபல் கோபுரக் கதை உண்மையே என்றும் ஆதிகாலத்தில் நம் முன்னோர்கள் ஒரே கூரையின் கீழ் வாழ்ந்ததால் ஒரு மொழிதான் பேசினர் என்றும் காலப்போக்கில் அவர்கள் பிரிந்து சென்ற பின்னர் மொழிகள் கிளைவிட்டுப் பரவின என்றும் பகர்ந்தனர்.அண்மையில் லண்டன் பல்கலைக் கழக நூலகத்த்தில் இருந்து உலக மொழிகளின் அட்லஸ் (ATLAS OF WORLD LANGUAGES) என்ற புத்தகத்தைப் படித்தபோது நியூ கினி (NEW GUINEA) தீவில் ஆதி வாசி மக்கள் 750-க்கும் அதிகமான மொழிகள் பேசுவதும், ஆஸ்திரேலியப் பழங்குடி (AUSTRALIAN ABORIGINES) மக்கள் 250 -க்கும் அதிகமான மொழிகள் பேசுவதும், உலக மொழி இயல் அறிஞர்களுக்குப் புதிராக விளங்குகிறது; பழைய மொழியியல் கொள்கைகளுக்குச் சவாலாக அமைந்துள்ளது என்று செப்பியு ள்ளதை அறிந்தேன்.தாமஸ் பர்ரோ, மர்ரே பி. எமனோவ் ஆகிய இருவரும் வெளியிட்ட திராவிட மூல சொற்கள் சுமார் 4500 மட்டுமே என்று எழுதிய (ETYMOLOGICAL DICTIONARY OF DRAVIDIAN LANGUAGES) புத்தகத்திலும் உள்ள தவறுகளைச் சுட்டிக்காட்டி ஆராய்ச்சிக் கட்டுரை எழுதினேன். அரிசி, நீர் என்பன மற்ற ஐரோப்பிய மொழிகளில் ஆதிகாலத்தில் இருப்பதைக் காட்டினேன். நீர்த் தேவதைகளை நீரெய்ட்ஸ் என்று கிரேக்கர் அழைப்பர். கிரேக்க மொழியில் பழைய (PALEO) தொலை (TELE) ஓடு (ODOMETER) கை (CHI), நீர் (NEREIDS=WATER NYMPHS) முதலிய சொற்கள் அலக்ஸாண்டரின் இந்தியப் படையெடுப்புக்கு முன்னரும் இருப்பதைக் காட்டினேன். யவன, ஹோரா (தொல்காப்பியத்தில் ஓரை) முதலிய சொற்கள் பற்றி மயிலை வேங்கட சாமி, வையாபுரிப் பிள்ளை ஆகியோர் எழுதியவையும் தவறு என்று கண்டேன். யவன என்ற சொல் ஆதிகாலத்தில் இருந்தே மஹாபாரதம் முதலிய நூல்களில் உள்ளது.ஆக நான் கண்ட உண்மை இதுதான்:உலகிலுள்ள பழைய மொழிகளில் சில சொற்கள் ஒன்றாகவே இருக்கும்; தமிழ் சொற்களான அப்பா. அம்மா உலகில் பல மொழிகளில் உள்ளன. இதை வைத்து மட்டும் அவை தமிழில் இருந்த வந்ததாகச் சொல்ல முடியாது. இன்னும் சில சொற்கள் ஒலியை அடிப்படையாக வைத்து வரும் உலகிலுள்ள பெரும்பாலான மொழிகளில் பறவைகளின் பெயர்கள் “கா, கீ, கு, கொ,கெ, கோ, கே” என்ற சொற்களில் துவங்கும்; அவைகளின் ஒலியில் இருந்து மனிதன் உருவாக்கிய சொற்கள் இவை. இதில் வியப்பு எதுவும் இல்லை.உலகிலுள்ள பழைய மொழிகளை ஆராய்ந்தால் அவைகளின் சொற்கள் ஸம்ஸ்க்ருதத்தில் இருந்தோ தமிழில் இருந்தோ கிளைவிட்டுப் பரவியிருப்பதைக் காணலாம்.சில அடிப்படை மொழி இயல் கொள்கைகளைப் பயன்படுத்தினால் அவை எப்படி மாறின என்பதையும் புரிந்து கொள்ளலாம்.உதாரணமாக உலகிலுள்ள எல்லா மொழிகளிலும் ஆர் (R=L) என்பதும் எல் என்பதும் இடம் மாறும்எம்- வி- பி (M=V=P/B) என்பன இடம் மாறும்ஆர் (R=D) டி என்பது இடம் மாறும்த-வும் ச- வும் ஒலி மாறுவதை TION என்று முடியும் சொற்களில் காணலாம் ( உச்சரிக்கும் விதம் ஷன் SION ). ஆக திரு = ஸ்ரீ = ஸர் பட்டம் என்பதையும் காணலாம். இதை CERES தெய்வமாகவும் காண்கிறோம். லெட்சுமி, லக்ஷ்மீகரம் என்பதே பொருள். திருமிகு என்பதை ஸர்/ SIR (ஸ்ரீ) பட்டம் கொடுத்து ஆங்கிலேயர் கௌரவிப்பர்T=S ( சீர், திரு) Sri= Ceres (Goddess of Wealth in the West)அடுத்ததாக கண்ணாடி பிரதிபலிப்பு விதி; அதாவதுமிர்ரர் இமேஜ் (MIRROR IMAGE) ஏற்படும்;அதாவது யாளி (YAALI= LEO) என்பதை எழுதி கண்ணாடியில் காட்டினால் லியோ என்று வரும் (LEO= சிங்கம், சிம்ம ராசி)தமிழில் கூட இலக்கணப் போலி உண்டு வாயில் என்றாலும் இல்வாய் என்றாலும் ஒன்றே.ஆக எனது கொள்கை இதுதான்.:--ஆங்கிலத்தில் ஆயிரக்கணக்கான தமிழ் சொற்கள் உண்டு. அவைகள் அனைத்திற்கும் ஸம்ஸ்க்ருத மூலம் கிடையாது .மொழியியல் அறிஞர்கள் ஆங்கிலம் என்பது ஸம்ஸ்க்ருதத்துடன் தொடர்புடையது, திராவிட மொழி என்பது வேறு என்று இயம்புவர். அது தவறு.ஸம்ஸ்க்ருத மூலம் இல்லாத ஆங்கிலச் சொற்களில் தமிழ் மூலமிருப்பதை, உற்று நோக்கினால் புரிந்து கொள்ளலாம். சில சொற்களுக்கு ஸம்ஸ்க்ருதத்தைவிட தமிழ் நெருக்கமாக இருப்பதையும் காணலாம்; ONE ஒன்று=ஒன், EIGHT எட்டு= எய்ட், COT கட்டில்=காட்ஆகவே உலக மொழிகள் அனைத்தும் பரஞ்சோதி முனிவர் திருவிளையாடல் புராணத்தில் புகல்வதைப் போல சிவனின் உடுக்கை ஒலியில் இருந்து (மாஹேஸ்வர சூத்ரம்) பிறந்தவையே; அது ஒரு புறம் தமிழாகவும் மறு புறம் ஸம்ஸ்க்ருதமாகவும் பரிணமித்தது. உலக மொழிகள் அனைத்தும் தமிழ்-ஸம்ஸ்க்ருத மூல ஒலிகளில் இருந்து தோன்றியவையே. அப்படிப் பார்க்கையில் ஆங்கிலமும் தமிழ் -ஸம்ஸ்க்ருத மூல மொழியில் இருந்து பிறந்ததே.கீழ்கண்ட சொற் பட்டியல் மாதிரிக்காக கொடுக்கப்பட்டுள்ளது. எனது அகராதி மார்ஜினில் (MARGINAL NOTES) உள்ள சொற்கள் அனைத்தையும் போடுவது இயலாது; அதாவது ஆயிரக்கணக்கான சொற்கள் தமிழ் தொடர்புடையவை. 1991 ஆம் ஆண்டில் சாத்தூர் சேகரன் என்னிடம் பி பி ஸி தமிழோசைப் பேட்டியில் சொன்னது ஓரளவு உண்மையே. அவர் ஸம்ஸ்க்ருதத்தைச் சொல்லத் தவறிவிட்டார் (எனது முந்தைய மொழி இயல் கட்டுரைகளில் மேலும் பல உதாரணங்கள் உள்ளன. கிரேக்க- தமிழ் தொடர்பு ஆராய்ச்சிக் கட்டுரையிலும் பல எடுத்துக் காட்டுகளை முன் வைத்துள்ளேன். கண்டு மகிழ்க!)இந்த வகையில் நோக்கினால் ஒரு சொல் தமிழ் சொல்லா, அல்லது ஸம்ஸ்க்ருதச் சொல்லா என்று நீண்ட காலமாக நிகழ்ந்துவரும் சர்ச்சையும், வாதப் ப்ரதிவாதங்களும் முடிவுக்கு வரும்COGNATE WORDSசில சொற்கள் ஸம்ஸ்க்ருதத்திலும் காணப்படும்Tamil/ Sanskrit EnglishDeivam/ Deva Deo தெய்வம்;Kadavul God கடவுள்Periya/ Bruhath Big பெரியOndru One ஒன்றுEttu /Ashta Eight எட்டுParaththai/ Para Stree Prostitute பரத்தைVeera Hero வீரன்Manathu/ Manas Mind மனது காமKama/ Kama amorous காமPatha=Adi Path, Pedestal, Foot பத, பாத, அடிDharma=aram Moral அறம்Neer Nereids= water nymphs நீர்Puttil Bottle புட்டில்Arukan/ Bargo Argos (light, sun) அருகன்Andira/ Aindra/Indra Andrew (English name) அண்டிரன் /ஐந்திர, இந்திரPillai Fille (French) பிள்ளைTarai Terrain தரைTele (phone, scope, vision) Tolai தொலைPazaiya Paleo (ntology) பழையPiththu Fad பித்துKuuli Ghoul/Ghost கூலிVathuvai /Bride Wed வதுவைPaiyul (Purananuru) Paiyon (Greek)= song பையுள்Aiyavi (smallest seed) Iota ஐயவிMaaya Magic (g=y) மாயStaanu/ Thun Stand தாணுAAndu Annum, annual ஆண்டுDuusi Dust தூசிMORE COGNATE WORDSTAMIL WORDS ENGLISH WORDSATHLETE -ATALAR அடலர் ஏர் உழுதல்; AUGURY- ARIKURI அறிகுறிARABLE- ER UZAKKUUTIYA/ ஏர் உழுதல்;APOLLO- PAKALAVAN (MIRROR IMAGE) பகலவன் AURUM/GOLD- AADAKAM (AOR/HEBREW WORD, MIRROR IMAGE RAYI SKT.WORD) ஆடகம்ANTHEM/ANTHOLOGY – SANTHAM சந்தம்; ATHRO(POLOGY)- AAN=MAN ஆண்MAN- AAN மனிதன்/மானுடன்; ARGOTER (BEG)- ERPATHU (IKAZSSI) ஏற்பது (இகழ்ச்சி); AVER(T)- THAVIR தவிர் ;A-VENGE- VANJI வஞ்சி; AWE- ACHCHAM அச்சம்; AXIS-ACHU அச்சு A-TTACK- THAAKKU தாக்கு ; ANCHOR- NANGUURAM நங்கூரம்; ATTIRE-AADAI ஆடை ;ARDENT, ARDOUR- AARVAM ஆர்வம் ;CUMULATE/ACUMULATE- KUVI, KUMITHTHU குவி/குமித்து; AWARE- ARI (VEN) அறி ;ANTIQUITY- AATHI (KUTI) ஆதி ;ALL-ELLAA (MIRROR IMAGE) எல்லா;ATTAIN-ADAI அடைADAMANT- ADAAVADI அடாவடி ;AMPHORA- AMBARAA (SHAPE) அம்பறா (துணி- வடிவம்); BAY-VAAY வாய்; BURG- PURA, UUR புரம்/ஊர்; BOAT-PATAKU படகுBETEL-VETTALAI வெற்றிலை; BIRD- PARAVAI, ANNAP’’PEDU’’SEVAR PEDU பறவை/ பேடு; BRIDE- VADUVAI வதுவை; BIRTH-PIRATHTHAL பிறத்தல்BARRIER- VARAIYARAI வரையறை; BLAZING- PALAPALAPPU பளபளப்புBARN- ARAN/LOFT பரண்; BLUFF-ULARU உளறு; BOY- PAIYAN பையன்/பியூன்BARE – VERUM வெறும் ;BARREN- VARANDA வறண்ட ;BURY-PUTHAI புதை;BEAT- PUTAI- NAIYAP PUDAI புடை/ நையப்புடை; BLAST- PILA, VIlAASU பிள/விளாசு; FLAW- PIZAI பிழை ;BATTER- PAATARAI பட்டறை வேகு/வேக்காடு; BAKE- VEGU, VEKKAADU வேகு/வேக்காடு;BABY- PAAPPAA பாப்பா ;BAG- PAKKU (SANGAM TAMIL) பக்குCCONCH- SANGU சங்கு சரடு கயிறு; CORD- KODI, SARADU சரடுCOIR- KAYIRU கயிறு; COWRY- SOZI சோழி; CHIRO- KAI/HAND கை கல் செறி, செழுமை, சீர், திரு; CAL- KAL (STONE), CALCULATE கல் ;CERES- SIIR, SRI, SEZUMAI, THIRU, செறி, செழுமை, சீர், திருCHAFF- SAAVI சாவி செப்பு/செம்பு; COPPER- SEPPU செப்பு/செம்புCRORE- KODI கோடி; CLAY- KALI (MAN) களி; COPRA- KOPPARAI கொப்பறைCASH- KAASU காசு; CHOULTRY- SATTHTHIRAM சத்திரம் ; CHIT- SIITU (KKAVI), SITTAI சீட்டு/சிட்டை; CURRY- KARI கறி; CURL- SURUL சுருள் ; CUTE-SUTTI சுட்டி ;CHAR- KARI கரி ;CUP- KOPPAI, KUVALAI கோப்பை,குவளை; CROOKED- KURUKIYA குறுக்கு குறுகியCOLD, CHILL- KULIR குளிர் ; CURVE- SUZIVU சுழிவு ; COOPT- KUUTTU கூட்டுCUDDLE-KATTU கட்டு ; CROWD- KUUTTAM கூட்டம்; CHAOS- KUZAPPAM குழப்பம்CHEER – SIRI சிரி ; CELEBRATE- KALI (PPU) களி(ப்பு); COARSE- SORASORA(PPU) கரகர, சொர சொர; CHATEAU –KOTTAI கோட்டை; COASTAL- KADAL +ORA கடல் ஓரCYST- KATTI கட்டி; CRACK- KIRUKKU கிறுக்கு ; CODNEMN- KANDI, KANDANAM கண்டி/கண்டனம், ;COIL- SUZAL, சுழல்/குழல்இதோ ரிக் வேதத்தில் சில தமிழ்ச் சொற்கள்:-எண்கள் பற்றி:-ரிக் வேதத்தில் பத்து மண்டலங்கள் உள்ளன. அடைப்புக்குறிக்குள் உள்ள எண்களில்முதலில் மண்டலம், பின்னர் மந்திரத் துதியின் எண், அதிலுள்ள மந்திர வரியின் எண் என்ற வரிசையில் கொடுத்துள்ளேன். இந்த எண்களை எடுக்க உதவிய நூல் பகவான் சிங்கின் ‘வேதிக் ஹரப்பன்ஸ்’ Vedic Harappans என்ற நூலாகும்.உஷ் ட் ர – ஒட்டகம் (ரிக். 1-138-2; 8-5-37;8-6-48)கர்தப- கழுத (ர=ல)/ கழுதை (1-29-5; 3-53-23)காகம்பிர- காகம் (6-48-17)மயூர- மயில் (1-191-4; 3-45-1; 8-1-25)சிம்ஹ- சிங்கம் (5-44-1)உட்ச- ஊற்று (2-16-7)கூப – கூவம்/ கிணறு 1-105-17குல்யா – குளம் , கால்வாய்நீர் – நீர்பூமி-புவி 2-14-7யூப – 5-2-7 சங்கத் தமிழ்புஷ்ப/ பூ – அதர்வ 8-712பலி- 1-70-9மது- தேன் 1-90-6மத்ஸ்ய/ மச்ச – 10-68-8ரத்ன- 1-20-7ரஜ்ஜுப் பொருத்தம் – ரஜ்ஜு 1-162-8ராஜசூயம்- அதர்வ – 4-8-1புறநானூற்றின் அடிக்குறிப்பில் ராஜசூயன் வேட்ட பெருநற்கிள்ளி என்ற பெயர் உள்ளதுசங்கு- அதர்வ 4-10-1களம்- நெல் அடிக்கும் களம் (10-48-7)சில சொற்களை அப்படியே தமிழ்க் கவிதைகளில் பயன்படுத்தியுள்ளனர். அது ரிக்வேத காலம் முதல் இன்று வரை புழக்கத்தில் இருப்பதும் வியப்புக்குரிய செய்தி. இதோ சில சொற்கள்:ரிஷபம் (6-16-47) (இடபம்/விடை – தேவாரத்தில்வாரணம் (யானை) – (ஆண்டாள் வாரணம் ஆயிரம்)கபி/கவி – குற்றாலக் குறவஞ்சி (10-86-5)கோ (3-1-23)- கோவலன்/ கோபாலன் (சிலப்பதிகாரம்)xxxஇன்னும் சில சொற்கள் சர்வ சாதாரணமாக பேச்சு வழக்கிலும் பத்திரிக்கைகளிலும் புழக்கத்தில் இருக்கின்றன.ஸர்ப- சர்ப்பம்/பாம்பு (10-16-6),serpentம்ருக (மான்) – மிருகம்மேஷ- மேட ராசி/ மேஷராசிவராக – வராஹ அவதாரம்ஹம்ச- அன்னம் (2-34-5)ஆரண்யப் பசு – காட்டு மிருகம்/ எருமை (10-90-8) ;ஆரண்யம் (காடு) என்ற சொல் வேதாரண்யம் முதலிய ஊர்ப்பெயர்களில் காணப்படும்பாச (கயிறு)- 2-27-16)பஹு அன்ன – நிறைய உணவு(பஹு என்பது தமிழில் வெகு என்று மாறும் (ப=வ)அன்னம் – உணவு இப்பொழுதும் புழக்கத்தில் உள்ள சொல் – அன்ன தானம்அங்குச- அங்குசம் (8-17-10)கச (கசையடி)- (5-83-3)தண்ட – தடி (8-33-6)தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் – தமிழ்ப் பழம்ழொழிபந்தன – கட்டுதல் (5-12-4); ரக்ஷா பந்தன்தான்ய – தானியம் (5-53-13)பீஜ – விதை (ப=வ) (5-53-13)சகன் – சாணம் (அதர்வண வேதம் 3-14-4)வது/ பெண்5-37-3ஸ்வப்ன – சொப்பனம் – 2-28-10வசனம், வாக்கியம், வார்த்தைஇவற்றிலிருந்து என்ன தெரிகிறது?ரிக் வேதம் என்பது உலகிலேயே பழைய நூலாக இருந்தாலும் அவற்றிலுள்ள சொற்களை இன்றும் நாம் பயன்படுத்துகிறோம். நான் கொடுத்த எடுத்துக் காட்டுகள் தவிர நூற்றுக் கணக்கான சொற்கள் உள்ளன. இன்னும் ஆங்கிலத்தில் நமக்குத் தெரிந்த சாதாரன சொற்களையும் ஒப்பிட்டால் அடுத்த நிமீடமே நமக்கு ஏறத்தாழ ஆயிரம் ரிக்வேதச் சொற்கள் தெரிந்து விடும். முப்பதுக்கும் மேற்பட்ட ஆங்கில, ஜெர்மானிய, பிரெஞ்சு அறிஞர்கள் வேதங்களைப் பற்றி எழுதியுள்ளனர். இப்படி வெளிநாட்டுக்காரர்களே வேதத்தைப் படிக்க இயலுமானால் நம்மால் முடியாதா? இதை உணர்ந்து அனைவரும் முறையாக வேதத்தைப் பயிலல் வேண்டும்.அப்படிச் செய்தால் புதிய உண்மைகள் வெளிப்படும். திராவிட, இந்திய-ஆரிய மொழிக் குடும்பக் கொள்கைகள் தவிடு பொடியாகும்.ஆன்றோர்கள் `அரியும் சிவனும் ஒன்னு; அறியாதவன் வாயில் மண்ணு` என்பர். நாம் `தமிழும் சம்ஸ்கிருதமும் ஒன்னு; அது நமக்குக் கண்ணு; அதைப் புரிந்துகொள்ளாதவன் வாயில் மண்ணு` என்போம்.வாழ்க தமிழ்மொழிகள்,தமிழ் , ஆரிய , மொழிக் குடும்பம், திராவி
No comments:
Post a Comment