Friday, March 27, 2020

திரு அருட்பா - கல்லார்க்கும் கற்றவர்க்கும்


Thursday, April 19, 2012

திரு அருட்பா - கல்லார்க்கும் கற்றவர்க்கும்

திரு அருட்பா - கல்லார்க்கும் கற்றவர்க்கும்

இறைவன் எல்லாவற்றிற்கும் பொதுவாக இருக்கிறான். படித்தவன், படிக்காதவன், வல்லவன், இளைத்தவன், தன்னை மதிப்பவன், தன்னை மதிக்காதவன் நல்லவன், பொல்லாதவன் என்று அனைத்திற்கும் சாட்சியாக நடுவில் நிற்கிறான்.

வள்ளலார் பாடுகிறார்....





கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே
காணார்க்கும் கண்டவர்க்கும் கண்ணளிக்கும் கண்ணே
வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரம்அளிக்கும் வரமே
மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதிகொடுக்கும் மதியே
நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்ற நடுவே
நரர்களுக்கும் சுரர்களுக்கும் நலங்கொடுக்கும் நலமே
எல்லார்க்கும் பொதுவில்நடம் இடுகின்ற சிவமே
என்அரசே யான்புகலும் இசையும்அணிந் தருளே. 





கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே = படித்தவன், படிக்காதவன் இரண்டு  பேருக்கும் அவன் இன்பம் தரும் இன்பமாய் இருக்கிறான்

காணார்க்கும் கண்டவர்க்கும் கண்ணளிக்கும் கண்ணே = ஊனக்கண் கொண்டு கண்டவர்கள், அது இல்லாமல் காண முடியாதவர்கள் இரண்டு பேருக்கும் ஞானக் கண் தரும் கண் போன்றவனே


வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரம்அளிக்கும் வரமே = வலியவர்களுக்கும் எளியவர்களுக்கும் வரம் தருபவன் அவன்.


மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதிகொடுக்கும் மதியே = இறைவனை நம்பி அவனை மதித்து வணங்குபவர்களுக்கும், மதிக்காமல் நாத்திகம் பேசி நாத் தழும்பு ஏறியவர்களுக்கும் நல்ல புத்தியை தருபவன் அவன்


நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்ற நடுவே = நல்லதுக்கும், பொல்லாததற்கும் நடுவில் நின்றவன்


நரர்களுக்கும் சுரர்களுக்கும் நலங்கொடுக்கும் நலமே = மனிதர்களுக்கும், தேவர்களுக்கும் நலம் கொடுக்கும் நலமே



எல்லார்க்கும் பொதுவில்நடம் இடுகின்ற சிவமே  = அனைவருக்கும் பொதுவாக இருப்பவனே

என்அரசே யான்புகலும் இசையும்அணிந் தருளே. = என்னுடைய அரசனே, நான் பாடும் இசை பாடலையும் அணிந்து அருளே 



இது இந்து மதத்தின் சிறப்பு. கிறிஸ்துவ, இஸ்லாம், போன்ற மதங்களின் கடவுள்கள் ரொம்ப கோபக்காரர்கள். நியாய தீர்ப்பு, இறுதி தீர்ப்பு, என்று ரொம்ப பயமுறுத்துவார்க

No comments:

Post a Comment