Saturday, March 7, 2020

காவலன் ஆப்'பை thanks to dinamalar.com

பெண்களின் பாதுகாப்பிற்காக அறிமுகப்படுத்தப் பட்டிருக்கும், 'காவலன் ஆப்'பை பதிவிறக்கம் செய்தேன். பதிவிறக்கம் செய்யும்போது, நம், 'பர்சனல்' தகவல்கள் கேட்கப்பட்டன. விபரங்களை கொடுத்ததும், நமக்கு ஆபத்து வரும்போது, தெரியப்படுத்த விரும்பும் மூன்று பேரின் விபரங்கள் கேட்கப்பட்டன.
அம்மா - அப்பா மற்றும் அக்காவுடைய தகவல்கள், உறவு முறை மற்றும் தொலைபேசி எண்ணும் பதிவு செய்தேன். எல்லாம் முடிந்த பின், 'ஆப் டவுண்லோடு' என்ற செய்தி வந்ததும், எஸ். ஓ. எஸ்., என, ஒரு, 'லோகோ' வந்தது.
அதன்பின், வேறு ஏதாவது வருகிறதா என, 'டச்' செய்தது தான் தாமதம், அந்த நொடியில், அம்மா, அக்கா மொபைலுக்கு, 'மெசேஜ்' வரும் ஒலியுடன், என் போனில் அதிர்வுடன், பேச அழைப்பு வந்தது. எண், 100ஐ பார்த்தவுடன், 'குப்'பென்று வியர்த்தது.
'இவ, இங்க தான இருக்கா... இது என்ன மெசேஜ்...' என்று கேட்டார், அம்மா. ஒரு வழியாக, தைரியத்தை வரவழைத்து, எடுத்து பேசினேன்.
எதிர்முனையில், 'நாங்க, சென்னை, 'கன்ட்ரோல்' அறையில் இருந்து பேசறோம்... என்ன ப்ராபளம்...' என, கேட்டனர்.
நடந்த அனைத்தையும் சொல்லி, வருத்தம் தெரிவித்தேன்.
'இட்ஸ் ஓ.கே.,மா... ஏதாவது பிரச்னைன்னா, அந்த, 'லோகோ'வை, 'டச்' பண்ணினா போதும், எங்க உதவி கண்டிப்பா இருக்கும்...' என்றனர்.
பயத்தில் நடுங்கினாலும், மிக மகிழ்ச்சியாக இருந்தது. வேதனை என்னவென்றால், இதுபற்றி நிறைய பேருக்கு தெரிந்தும், 'ஸ்மார்ட் போன்' வைத்திருந்தும், இதை, 'டவுண்லோடு' பண்ணவில்லை என்பது தான்.
வேலைக்கு செல்லும் பெண்கள் ஒவ்வொருவரும், இந்த காவலன் செயலியை பதிவிறக்கம் செய்தால், ஆபத்து காலத்தில், உதவ முடியும் என்று நம்புகிறேன்.
பயனுள்ள இந்த செயலியை, பெண்கள், அலைபேசியில் உடனடியாக, 'டவுண்லோடு' செய்து கொள்ள வேண்டுகிறேன்.
பிரியா, கோவை

No comments:

Post a Comment