தோள்கண்டார் தோளே கண்டார் தொடுகழல் கமலம் அன்ன
தாள்கண்டார் தாளே கண்டார் தடக்கை கண்டாரும் அஃதே
வாள்கொண்ட கண்ணார் யாரே வடிவினை முடியக் கண்டார்
ஊழ்கொண்ட சமயத்து அன்னான் உருவுகண் டாரை ஒத்தார்.
-
கம்ப இராமாயணம் - வஞ்ச மகள் வந்தாள்
கம்பனின் வார்த்தை விளையாட்டுக்கு கீழ் வரும் பாடல் ஒரு உதாரணம்.தன் அரக்கி வடிவத்தை மறைத்து கொண்டு, அழகான பெண் போல உருக் கொண்டு சூர்பனகை வருகிறாள்.கம்பனின் பாட்டு கொஞ்சுகிறது.பஞ்சி ஒளிர், விஞ்சு குளிர் பல்லவம் அனுங்க,செஞ் செவிய கஞ்சம் நிகர், சீறடியள் ஆகி,அம் சொல் இள மஞ்ஞை என, அன்னம் என, மின்னும்வஞ்சி என, நஞ்சம் என, வஞ்ச மகள் வந்தாள்.சூர்பனகையின் பாதம் நடந்து நடந்து வருந்துகிறதுஅது எவ்வளவு மெல்லிய பாதம் தெரியுமா?பஞ்சி = பஞ்சு போன்றஒளிர் விஞ்சு குளிர் பல்லவம் அனுங்க = பல்லவம் அப்படினா தளிர்.அனுங்க என்றால் வருந்த. குளிர்ச்சியான தளிர்கள் வருந்தும் படி. ஒளி விட்டு விளங்கக்கூடிய , குளிர்ச்சியான தளிர்களை விட (விஞ்ச) மென்மையான பாதம் வருந்தசெஞ் செவிய = செக்க சிவந்தகஞ்சம் நிகர் = தாமரை மலருக்கு நிகரானசீறடியள் ஆகி = சிறிய அடி. சிறப்பான அடி. மெல்ல மெல்ல அடி எடுத்து வந்ததால் சிற்றடிஅம் சொல் இள மஞ்ஞை என = இனிமையாக அகவும் மயில் போலஅன்னம் என = மென்மையான அன்னம் போலமின்னும் வஞ்சி என = மின்னும் வஞ்சிக் கொடி போலநஞ்சம் என = விஷம் போலவஞ்ச மகள் வந்தாள் = வஞ்சனையாக அந்தப் பெண் வந்தாள்பஞ்சு போன்ற மென்மை. இளந்தளிரின் வெதுவெதுப்பான அந்த ஈரம். மயில் போல சாயல். தாமரை மலர் போல சிவப்பு. அன்னம் போன்ற தூய்மை. இத்தனையும் இருக்கிறது. ஆனால், நிஜம் இல்லை. வஞ்ச மகள் வந்தாள்.
கம்ப இராமயாணம் - கும்ப கர்ணா, கெட் அவுட்
கம்ப இராமயாணம் - கும்ப கர்ணா, கெட் அவுட்கும்ப கர்ணன் எவ்வளவோ எடுத்து சொல்கிறான் சீதையை விட்டு விடும்படி. இராவண கேட்பதாய் இல்லை. கடைசியாக சொல்கிறான்....மானுடர் இருவரை வணங்கி மற்றும் அக்கூன் உடைக் குரங்கையும் கும்பிட்டு உய்தொழில்ஊன் உடை உம்பிக்கும் உனக்குமே கடன்யான் அது முடிக்கிலேன் எழுக போகென்றான்மானுடர் இருவரை வணங்கி = இராம லட்சுமணர்களை வணங்கிமற்றும் அக் கூன் உடைக் குரங்கையும் கும்பிட்டு = அனுமன் மற்றும் இதர கூனுடைய குரங்குகளை கும்பிட்டுஉய்தொழில் = உயிர் பிழைக்கும் தொழில்உம்பிக்கும் உனக்குமே கடன் = உன் தம்பியான விபீஷனனுக்கும் உனக்குமே கடன்
யான் அது முடிக்கிலேன் = என்னால அது முடியாது
எழுக போகென்றான் = நீ எழுந்து போ என்றான்ஒரு புறம் கும்ப கர்ணனின் தன் மான உணர்ச்சியை தூண்டி விடுகிறான் - மானிடர்களையும், குரங்குகளையும் உன்னால் வணங்க முடியுமா ? நீ செஞ்சாலும் செய்வ, நான் மாட்டேன் என்று அவனை சமாதானத்தில் இருந்து விலக்கி போருக்கு செல்ல தூண்டுகிறான்.மறுபுறம், அவனின் சகோதர பாசத்தை தொடுகிறான். உன் தம்பி விபிஷணன் போய் விட்டான், நீயும் போய் விடு, நான் தனியாக இருப்பேன் என்று மறைமுகமாக சுட்டுகிறான்.அதாவது கும்ப கர்ணன் சொன்ன வாதங்களை எல்லாம் விட்டு விட்டான்...அதற்க்கு அவனிடம் பதில் இல்லை. அவனை உசுப்பு ஏத்தி விட்டு, அவனை போருக்கு செல்ல வைக்க வேண்டி, இப்படி சொல்கிறான். கும்ப கர்ணன் provoke ஆனானா இல்லையா ? இதற்க்கு கும்ப கர்ணன் என்ன சொன்னான் ?கம்ப இராமாயணம் - சீதை தீக் குளித்த பின்
கம்ப இராமாயணம் - சீதை தீக் குளித்த பின்சீதை தீயில் இறங்கிய உடன், அவள் கற்பின் சூடு தாங்காமல் அக்னி தேவன் அவளை கொணர்ந்து இராமனிடம் தந்து, இவள் கற்பில் சிறந்தவள் என்று சொல்கிறான்.அப்போது இராமன் சீதையிடம் ஒரு மன்னிப்பு கூட கேட்கவில்லை. "தெரியாமல் உன் கற்பை சந்தேகப் பட்டேன்" என்றோ "உலகுக்கு உன் கற்பை நிரூபிக்க தான் அப்படி செய்தேன்" என்றோ ஒன்னும் சொல்லவில்லை.அவள் அருகில் வருகிறான். அக்னி தேவனைப் பார்த்து சொல்கிறான்....அழிப்பு இல சான்று நீ, உலகுக்கு; ஆதலால்இழிப்பு இல சொல்லி, நீ இவளை, ''யாதும் ஓர்பழிப்பு இலள்'' என்றனை; பழியும் இன்று; இனிக்கழிப்பிலள்' என்றனன் - கருணை உள்ளத்தான்.அழிப்பு இல = அழிக்க முடியாதசான்று நீ = சாட்சி நீ (அக்னி சாட்சி)உலகுக்கு = இந்த உலகத்துக்குஆதலால் = ஆதலால்இழிப்பு இல சொல்லி = இவளைப் பற்றி நீ ஒன்றும் இழிவாக சொல்லவில்லைநீ இவளை = நீ இந்த சீதையை'யாதும் ஓர் பழிப்பு இலள்'' என்றனை = எந்த ஒரு பழியும் இல்லாதவள் என்றனைபழியும் இன்று = (எனவே) இவளிடத்தில் ஒரு பழியும் இல்லைஇனிக் கழிப்பிலள் = இனி இவள் கழிக்க தக்கவள் அல்லள்என்றனன் = என்று இராமன் கூறினான்கருணை உள்ளத்தான் = கருணை உள்ளம் கொண்டவன்
செஞ்செவிய கஞ்சநிகர் சீறடிய லாகியமிள
மஞ்சையென அன்னமென மின்னும் வஞ்சியென
நஞ்சமென வஞ்சிமகள் வந்தாள்