Tuesday, March 31, 2020

pattinadhar padalgal

மாதா உடல் சலித்தாள்; வல்வினையேன் கால் சலித்தேன்
வேதாவும் கை சலித்து விட்டானே -நாதா
இருப்பையூர் வாழ் சிவனே, இன்னுமோர் அன்னை
கருப்பையூர் வாராமற் கான்.



பிறக்கும் போது கொண்டு வந்ததில்லை; பிறந்து மண்மேல்
இறக்கும் போது கொண்டு போவதில்லை; இடை நடுவில்
குறிக்கும் இச்செல்வம் சிவன் தந்ததென்று கொடுக்கறியாது
இறக்கும் குலாமருக்கு என் சொல்லுவேன் கச்சி ஏகம்பனே



வாளால் மகவரிந்து ஊட்டவல்லேன் அல்லேன்; மாதுசொன்ன
சூளாலிளமை துறக்கவல்லேன் அல்லன்; தொண்டுசெய்து
நாளாறில் கண்ணிடத்து அப்பவல்லேன் அல்லன்நான் இனிச்சென்று
ஆளாவது எப்படியோ திருக்காளத்தி அப்பருக்கே? 3




இருவினைமு மலமுமற இறவியொடு பிறவியற
     ஏக போகமாய் நீயு நானுமாய்
இறுகும்வகை பரமசுக மதனையரு ளிடைமருதில்
     ஏக நாயகா லோக நாயகா இமையவர் பெருமாளே.
 




No comments:

Post a Comment