Friday, March 27, 2020

திருக்குறள் -ரொம்ப போரடிக்குதா

திருக்குறள் -ரொம்ப போரடிக்குதா ?


சில சமயம் நமக்கு வாழ்க்கை ரொம்ப போரடிக்கிற மாதிரி இருக்கும். என்னடா இது, யாருமே இல்லையா நமக்குன்னு ரொம்ப தனிமையா, வெறுப்பா கூட இருக்கும். 

இப்படி போரடிக்காம இருக்க வள்ளுவர் ஒரு வழி சொல்றார்....

துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும்-யார் மாட்டும்
இன்புறூஉம் இன் சொலவர்க்கு


துன்புறூஉம் = துன்புறுதல்
துவ்வாமை = இல்லாமை
இல்லாகும் = இல்லாமல் போகும். யாருக்கு ?
யார் மாட்டும் = எல்லோரிடத்தும்
இன்புறூஉம் = இனிமை தரக்கூடிய
இன் சொலவர்க்கு = இனிய சொற்களை சொல்பவர்களுக்கு

எல்லோரிடத்தும், எப்பவும், இன்பம் தரும் இனிமையான சொற்களையே பேசி வருபவர்களைத் தேடி எல்லோரும் வருவார்கள். அவர்களுக்கு வாழ்க்கை போரடிக்காது. 

தனிமை துன்பம் போக வேண்டும் என்றால், எல்லோரிடமும் இனிமையாகப் பேசிப் பழகுங்கள்....அப்படின்னு வள்ளுவர் சொல்கிறார்.


செய்து தான் பார்ப்போமே !

No comments:

Post a Comment