Saturday, March 7, 2020

பெண்களின் மன அழுத்தத்தை குறைக்க, சில வழிகள்! thanks to dinamalar.com

பெண்களின் மன அழுத்தத்தை குறைக்க, சில வழிகள்!
Advertisement
 
 
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08மார்
2020
00:00
மன அழுத்தம் - இன்றைய சூழ்நிலையில், அனைவரும் சந்திக்கும் ஒரு மிகப்பெரிய பிரச்னை. குறுகிய கால மன அழுத்தத்திலிருந்து, நீண்ட கால மன அழுத்தம் வரை, அனைத்துமே நமக்கு மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது தான்.
மன அழுத்தம் ஏற்படாமல் இருக்க...

* காலையில், 15 நிமிடம் முன்னதாகவே எழுந்து விடுங்கள். உடற்பயிற்சி, யோகா என, இவற்றில் ஏதேனும் ஒன்றை செய்வது, மன அழுத்தத்திற்கு மிகச்சிறந்த மருந்தாகும்
* எங்காவது செல்ல வேண்டியிருந்தால், அதற்குரிய ஆடைகள் மற்றும் பொருட்களை முன்னதாகவே எடுத்து வைத்துக் கொள்ளவும்
* அன்று செய்ய வேண்டிய பணிகளையும், எப்போது செய்யப் போகிறோம் என்பதையும், காகிதத்தில் குறித்து வைப்பதால், எந்த வேலையையும் மறக்காமல் இருக்கவும், அதனால் ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்கவும் வழி செய்யும்
* பேருந்துக்காக காத்திருப்பது சிரமம் என்று கருதாதீர். அச்சமயத்தில், ஒரு புத்தகத்தை படிப்பது, காத்திருத்தலை சுகமாக்கும். அது மட்டுமல்லாமல், தேவையற்ற மன அழுத்தத்தையும் குறைக்கும்
* வேலைகளை பிறகு செய்து கொள்ளலாம் என, ஒதுக்கி வைப்பது, மன அழுத்தத்தை அதிகரிக்கும். செய்ய வேண்டியதை தாமதப்படுத்தாமல் செய்யுங்கள்
* ஒரு இடத்திற்கு செல்ல வேண்டுமென்றால், முன்கூட்டியே செல்ல பழகுங்கள். 10 நிமிடத்தில் செல்லக்கூடிய இடத்திற்கு, 20 நிமிடம் முன்பே செல்லுங்கள்
* தவறாய் போன ஒரு விஷயம் குறித்து, சிந்தித்துக் கொண்டே இருப்பதை விட, சரியாய் நிகழ்ந்த பலவற்றை குறித்து, அடிக்கடி நினைத்து மகிழுங்கள்
* புதிய இடங்களுக்கு செல்வதாக இருந்தால், முதலிலேயே வழியை தெளிவாக கேட்டு கொள்வது சிறந்தது. இதனால், மன அழுத்தத்தை குறைக்க முடியும்
* மனதில் கவலைகள் இருக்கும்போது, உங்களுக்கு பிடித்தவர்களுடனோ அல்லது பிடித்த விஷயத்தின் மீதோ கவனம் செலுத்துங்கள்
* மன அழுத்தம் இருக்கும் சமயத்தில், சிறிது நேரம் அமைதியாக ஓய்வெடுங்கள்
* உணவு, உடை, உறைவிடம் தவிர்த்த எதுவும், உங்களை மன இறுக்கம் கொள்ளச் செய்யாமல் பார்த்துக் கொள்ளுங்கள். எதற்கு முன்னுரிமை கொடுப்பது என்பதில் தெளிவு அவசியம்
* எந்த ஒரு செயலும் சுலபமாக செய்துவிட முடியும் என, நினைத்து, செய்ய துவங்குங்கள். கடினம் என்று நினைத்தால், நமக்கு மன அழுத்தம் தான் அதிகமாகும்.

ஏ.எஸ்.கோவிந்தராஜன்

No comments:

Post a Comment