Friday, March 27, 2020

thanks Poems from Tamil Literature


Wednesday, April 18, 2012

கம்ப இராமாயணம் - இன்று போய் நாளை வா


கம்ப இராமாயணம் - இன்று போய் நாளை வா


யுத்தத்தில் நிராயுதபாணியாக நிற்கிறான் இராவணன்.

இராமன் நினைத்திருந்தால் அவனை கொன்றிருக்கலாம். அவனுக்கு அறிவுரை சொல்கிறான்.

அறத்தின் துணை இன்றி வெறும் படை பலத்தால் யாரும் வெல்ல முடியாது என்று பலப் பல அறிவுரைகள் கூறுகிறான்.

கடைசியில், "இதை எல்லாம் நீ கேட்கவில்லை என்றால், இன்று போய் போருக்கு நாளை வா" என்றான்...






'ஆள் ஐயா! உனக்கு அமைந்தன மாருதம் அறைந்த
பூளை ஆயின கண்டனைஇன்று போய்போர்க்கு
நாளை வாஎன நல்கினன்--நாகு இளங் கமுகின்
வாளை தாவுறு கோசல நாடுடை வள்ளல்.

பொருள்:

ஆள் ஐயா = நீ சரியான ஆள் ஐயா. நீ எதை ஆளப் போகிறாய் ஐயா?

உனக்கு அமைந்தன = உனக்கு உள்ளன எல்லாம் (ஆள், அம்பு, சேனை எல்லாம்)

மாருதம் அறைந்த =பெரிய சூறாவளி காற்றில் அடிபட்ட

பூளை ஆயின கண்டனை = பூக்கள் போக கண்டனை

இன்று போய் = இன்று போய்

போர்க்கு = போருக்கு

நாளை வா = நாளைக்கு வா

 என நல்கினன் = என்று அருளினான்

நாகு இளங் கமுகின் = இளைய பாக்கு மரத்தின் மேல்

வாளை தாவுறு = வாளை மீன்கள் தாவும். அப்படி என்றால், அவ்வளவு உயரம் தண்ணீர் இருந்தது என்று அர்த்தம்.

கோசல நாடுடை வள்ளல் = கோசல நாடுடை வள்ளல்.

ஏன் கோசல நாடு ? இராமனுக்கு உள்ளது அயோத்தி தானே? மிஞ்சி

மிஞ்சி போன மிதிலை நாடுடை வள்ளல் என்று சொல்லி இருக்கலாம்.

சீதை ஒரே பொண்ணு. ஜனகனுக்கு அப்புறம் அந்த நாடு இராமனுக்கு தானே வரும். அயோத்தியும் சொல்லல, மிதிலையும் சொல்லல...கோசல நாடுடை வள்ளல் என்கிறார் கம்பர்.

கோசல நாடு கைகேயியின் தந்தையினுடையது.

அயோத்தியை பரதனுக்கு கொடுத்தாயிற்று.

மிதிலை இன்னும் கையில் வரவில்லை.

இலங்கையை விபீஷணனுக்கு தருவதாய் வாக்கு தந்து விட்டான் இராமன்.

ஒரு வேளை இராவணன் மனம் திருந்தி சீதையை சிறை விட்டு, இராமனிடம் சரணாகதி அடைந்தால் அவனுக்கு என்ன தருவது. இலங்கையை தர முடியாது.

பரதனிடம் பேசி, கோசல நாட்டை தரலாம் என்று இராமன் நினைத்து இருப்பானோ

கம்பனின் கவித் திறமையை என்ன என்று சொல்லுவது?

No comments:

Post a Comment